Jana Nayagan Audio Launch Live: ரசிகர்களுக்காக, நான் சினிமாவிலிருந்து விலகுகிறேன்... போங்க பேசிய விஜய்
Jana Nayagan Audio Launch LIVE Updates: ஜனநாயகன் விஜய்யின் சினிமா கேரியரில் கடைசிப்படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நடைபெறும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்டுகளை இங்கு காணலாம்.
Background
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் 69வது படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்....More
பொதுவாக, சிறந்த கெமிஸ்ட்ரி ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையேதான் இருக்கும். ஆனால் எனக்கு, அது கில்லி காலத்திலிருந்தே பிரகாஷ் ராஜ் சாருடன் எப்போதும் இருந்து வருகிறது. நன்றி, பிரகாஷ் ராஜ் சார்.
நான் சினிமாவுக்குள் நுழைந்தபோது, இந்தத் துறையில் ஒரு சிறிய மணல் வீடு கட்ட வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு அரண்மனையைக் கொடுத்திருக்கிறீர்கள்
இலங்கைக்குப் பிறகு, மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் உள்ளனர். இங்கு படமாக்கப்பட்ட சில தமிழ் படங்களை நான் நினைவு கூர விரும்புகிறேன். நம்ம நண்பர் அஜித் நடித்த பில்லா படமும் இங்க தான் எடுத்தாங்க, என்னுடைய காவலன், குருவி போன்ற எனது படங்களும் இங்குதான் எடுக்கப்பட்டது.
பலர் ஜனநாயகன் ஒரு ரீமேக் என்கிறார்கள் சிலர் இது ஒரு பாதி ரீமேக் என்கிறார்கள்.அனைவருக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இது 100% தளபதி படம். இது திரையரங்குகளில் கமர்சியல் விருந்தாக இருக்கும்.
" எனக்கு அப்போது வெறும் 21 வயது தான். இரண்டு படங்களுக்கு இசையமைத்திருந்த எனக்கு கத்தி படத்திற்கு இசையமைக்கும் பெரிய வாய்ப்பை கொடுத்தார். அவர் என்மீது வைத்த நம்பிக்கை எல்லாவற்றையும் மாற்றியது. கத்தி , மாஸ்டர் , பீஸ்ட் , லியோ , தற்போது ஜனநாயகன் ஆகிய அத்தனை படங்களின் பாடல்களும் வெற்றிபெற்றுள்ளன. அதற்கு காரணம் இந்த நபரின் மேல் இருக்கும் காதல் தான். எச் வினோத் உடன் எனக்கு இது முதல் படம். அவர் ரொம்பவும் இனிமையான மனிதர் " என அனிருத் பேசினார் .
ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பேசினார். பேசிமுடித்து தனது மகன் தூரத்தில் இருந்ததால் அவர் அங்கேயே நின்றார். தந்தையைப் பார்க்க விஜய் 800 மீட்டர் ரேம்ப் வாக்கில் குழந்தை போல் ஓடிச்சென்றார்
ஜனநாயகன் இசை வெளியீட்டில் பேசிய நடிகர் நாசர் " படுத்த படுக்கையாக கிடந்த என் மகனின் உயிரை காப்பாறியவர் நீங்கள் தான். நடிகர் சங்க கட்டிடத்திற்கு கடன் கேட்டபோது ஒரு கோடி ரூபாய் கொடுத்தார். நீங்கள் தயவு செய்து மீண்டும் நடிக்க வரவேண்டும். நீங்கள் வந்தாலும் உங்களது முடிவை யாரும் விமர்சிக்க மாட்டார்கள். அப்படி விமர்சித்தாலும் நீங்கள் அதை பொறுமையாக கையாள்வீர்கள் " என நாசர் கூறினார்
ஜனநாயகன் இசை வெளியீட்டில் பேசிய இயக்குநர் அட்லீ "என்னுடைய வெற்றி , புகழுக்கு காரணம் விஜய் அண்ணா தான் . அண்ணா என்னை அணுகியபோது 50 படங்களில் நடித்திருந்தார். நான் வெறும் உதவி இயக்குநராக இருந்தேன். அவருக்காக ஒரு படம் இயக்கச் சொன்னார். வேறு யாரும் அப்படி செய்ய மாட்டார்கள்" என்று பேசி முடித்த அட்லீ மேடையில் ஓடிவந்து நடிகர் விஜயை கட்டிப்பிடித்தார் தோளில் முத்தமிட்டார்.
ஜனநாயகன் இசை வெளியீட்டில் பேசிய இயக்குநர் நெல்சன் " இந்த கூட்டத்தை பார்ப்பதற்கு அர்ஜெண்டினா உலக கோப்பை கால்பந்து விளையாட்டை பார்ப்பது போல் இருக்கிறது. விஜயுடன் இன்னொரு படம் பண்ணதான் எனக்கு ஆசை. பீஸ்ட் படத்தில் நான் சில தவறுகளை செய்திருந்தேன். பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோது விஜய் எனக்கு தொடர்ந்து ஃபோன் செய்து நான் ஓக்கேவாக இருக்கிறேனா என்று பார்த்துகொண்டே இருந்தார். 'உனக்கும் எனக்கும் இருக்க இந்த உறவே ஒரு படம்தான நம்ம நட்பை விட அந்த படம் பெருசா ' என விஜய் என்னிடம் சொன்னார்
ஜனநாயகன் இசை வெளியீட்டில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் " மாஸ்டர் மற்றும் லியோ என்னுடைய கரியரில் முக்கியமான படங்கள். இதுதான் உங்கள் கடைசி படம் என்று சொன்னது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது அண்ணா. உங்கள் எதிர்கால ஆசைகளுக்கு வாழ்த்துகள். விஜய் அண்ணாவிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்றால் அது லியோ 2 படத்திற்கு டேட்ஸ் தான். நான் அப்படி கேட்டு அவர் பிளடி ஸ்வீட் என்று பதில் சொல்லியிருப்பார் " என்று லோகேஷ் பேசினார்.
ஜனநாயகன் இசை வெளியீட்டில் தமிழக வெற்றிக் கழகத்தில் கொடியை ஏந்திய ரசிகர் மலேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் சார்ந்த விஷயங்களை தவிர்க்கும் படி ரசிகர்களுக்கு முன்பே எச்சரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது
ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் நெல்சன் மைதானத்தில் இருக்கும் கூட்டத்தைப் பார்க்கையில் அர்ஜெண்டினா கால்பந்து விளையாட்டை பார்ப்பது போல் இருப்பதாக கூறினார்
மலேசிய சாதனை புத்தகத்தில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி இடம்பிடித்துள்ளது. மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியில் அதிக பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியாக ஜனநாயகன் இசை வெளியீடு சாதனை படைத்துள்ளது
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் தனது மகன் விஜய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அவரது அண்ணை ஷோபா . சிவகாசி படத்தில் இருந்து அவர் பாடிய 'கோடம்பாக்கம் ஏரியா' பாடலை பாடகர் திப்புவுடன் இணைந்து அவர் பாடியுள்ளார்
சற்று நேரத்திற்கும் விஜய் மேடைக்கு வந்துள்ளார். 80 ஆயிரம் ரசிகர்கள் சூழந்த அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் சென்று தனது ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்தார் விஜய். விஜயைப் பார்த்ததும் ரசிகர்கள் தவெக தவெக என கத்த தொடங்கினர்.இங்க வேணாம் என தனது ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை வைத்துள்ளார் விஜய்
80 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருக்க தளபதி விஜய் ரேம்ப் வாக் பாதையில் நடந்து தனது ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.
மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் இசை வெளியீடு நிகழ்ச்சியை ரசிகர்கள் இப்போது தொலைக்காட்சியிலும் பார்க்கலாம். ஜனநாயகன் படத்தின் சேட்டலைட் ரிலீஸ் உரிமையை Zee தமிழ் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. இசை வெளியீடு நிகழ்ச்சி வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி 6 மணி நேர காணொளியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது .
மலேசிய நேரப்படி மாலை 3 மணிக்கு துவங்க இருந்த ஜனநாயகன் இசை வெளியீடு நிகழ்ச்சி மழைக்காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியுள்ளது.
ஜனநாயகன் இசை வெளியீடு நடைபெறும் இடத்தில் நடிகர் விஜய் வருகை தந்துள்ளார். இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க சினிமா சார்ந்தே இருக்க வேண்டும் அரசியல் விஷயங்களோ , கட்சி சார்ந்த பொருட்களுக்கோ அனுமதி இல்லை என மலேசியா அரசு முன்கூட்டியே ரசிகர்களை எச்சரித்திருந்தது. தற்போது மைதானத்தில் ரசிகர்கள் தவெக தவெக என கோஷமிடத் தொடங்கியுள்ளார்கள்
இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்த நட்சத்திரங்கள் வருகை தந்து வருகிறார்கள். நிகழ்ச்சியின் நாயகன் விஜய் தற்போது நீல நிற கோட்டில் செம கூலான லுக்கில் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார்
ஜனநாயகன் இசை வெளியீடு நிகழ்ச்சிக்கு கிட்ட 85 முதல் 90 ஆயிரம் ரசிகர்கள் வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ 2000 முதல் 7000 வரை இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ள போதிலும் மைதானம் நிறையும் அளவு கூட்டம் திரண்டுள்ளது .
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் கோலாகலமாக சற்று நேரத்தில் முன்பு தொடங்கியது. முதல் பாடலாக துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் 'மேகமாய் வந்து போகிறேன்' பாடலுடன் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார்கள். நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில நிமிடத்திற்குள் மழை குறுக்கிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் மழையில் நனைந்தபடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள்.
மலேசியாவில் உள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக தொடங்கியது. அவரது படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அடங்கிய இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
லியோ படத்துக்குப் பின் விஜய் 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் சினிமா மேடையில் உரையாற்றப் போகிறார். ஜனநாயகன் படம் அவரின் கடைசிப் படம் என்பதால் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மலேசியாவில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா புக்கிட் ஜலீல் மைதானத்தில் நடக்கவுள்ள நிலையில் அங்கு ரசிகர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.
விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார் உள்ளிட்ட இயக்குநர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நடைபெறும் மலேசியாவின் கோலாலம்பூர் புக்கிட் ஜலீல் மைதானம் முன்பு விஜய்யின் ரசிகர்கள் மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு மலேசியா முழுவதும் படத்தின் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. பலரும் விஜய்யை காணும் ஆர்வத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கூடியுள்ளனர்.
- Home
- பொழுதுபோக்கு
- Jana Nayagan Audio Launch Live: ரசிகர்களுக்காக, நான் சினிமாவிலிருந்து விலகுகிறேன்... போங்க பேசிய விஜய்