இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று ஜம்மு - காஷ்மீர். எப்போதும் ரம்யமான காலநிலையை கொண்டிருக்கும் காஷ்மீரில் முக்கியமான பகுதி டால் ஏரி. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தருவது வழக்கம். கடுமையான பனிப்பொழிவு காலத்தில் டால் ஏரி உறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் டால் ஏரியில் மிதக்கும் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த மிதக்கும் திரையரங்கு ஆசியாவிலேயே முதல்முறையாக காஷ்மீர் சுற்றுலாத்துறையால் திறக்கப்பட்டுள்ளது.


இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை இயக்குனர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்கள் காஷ்மீரி பாடல்களை பாடி நடனமாடினர். இது அங்கிருந்தவர்களை வெகுவாகக் கவர்ந்தது.




திரையரங்கில், 1964ஆம் ஆண்டு வெளியான, “காஷ்மீர் கி காளி” என்ற திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இந்தப் படத்தை ஷிகாரா எனும் அலங்காரப் படகில் இருந்து சுற்றுலா பயணிகளும், நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களும் மிதந்தபடி கண்டுகளித்தனர்.


அதுமட்டுமின்றி காஷ்மீரில் படகுகளின் வரலாறு குறித்த குறும்படமும் திறந்த படகில் ஒளிபரப்பப்பட்டது. ஜீலம் நதி மற்றும் தால் ஏரியில் உள்ள படகுகளின் பழைய படங்கள், காஷ்மீரி கலாசாரம் மற்றும் பாரம்பரிய உணவு வகைகளை சித்தரிக்கும் பழைய சான்றுகள் மற்றும் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தும் கேலரியையும் உயரதிகாரிகள் பார்வையிட்டனர். காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத் துறையுடைய இந்தத் திட்டத்தை சுற்றுலா பயணிகள் வெகுவாக பாராட்டினர்.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: ‛லிவ் இன்’ உறவில் சமூக பார்வையை திணிக்கக் கூடாது: - உயர் நீதிமன்றம் கருத்து!


Puneeth Rajkumar Death Cause: புனீத் மரணம்: உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா? மருத்துவர் விளக்கம்!


அழுகிய முட்டை... புழுக்களுடன் சத்துணவு பொருட்கள் வினியோகம்... குழந்தைகளுடன் வந்த பெற்றோர் அதிர்ச்சி!