சர்வதேச அளவில் உச்சத்தில் கோடி கட்டி பறக்கும் எஸ்.எஸ். ராஜமௌலி ஆஸ்கார் விருதை வெல்வதற்காக தற்போது தனது குழுவுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் முகாமிட்டுள்ளார்.





ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் :

பாகுபலி, நான் ஈ, ஆர்.ஆர்.ஆர், மகதீரா என அவரின் திரை பயணத்தின் மூலம் அவர் மட்டும் முன்னேற்றம் காணாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையே சர்வதேச அளவிற்கு உயர்த்தியவர். ஆஸ்கார் விருது என்பது சர்வதேச அளவில் திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஒருமுறை ஹாலிவுட் படமான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக அந்த வெற்றியை தொட்டு பார்த்தார். அவருடன் ரசூல் பூக்குட்டிக்கும் ஆஸ்கார் விருது கிடைத்தது. அதற்கு பிறகு எந்த ஒரு இந்திய திரைப்படத்திற்கும் கிடைக்காத ஆஸ்கார் வாய்ப்பு, தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு நாமினேட் செய்யப்படும் லெவலுக்கு எட்டியுள்ளது. நிச்சயமாக இப்பட குழுவினர் ஆஸ்கருடன் தான் இந்திய திரும்புவோம் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.


 






 


நெகிழ்ச்சியான தருணம் :

அந்த வகையில் கிரிட்டிக் சாய்ஸ் விருது வழங்கும் விழாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வு ஹாலிவுட் பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் எஸ்.எஸ். ராஜமௌலி சந்தித்துள்ளார். இந்த விழாவில் இந்த இரு ஜாம்பவான்களும் பேசிய மூன்று நிமிட வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர்.


அந்த வீடியோவில் அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் மனைவி சுசி அமீஸ், ஆர்.ஆர்.ஆர் படத்தை இரண்டு முறை ஜேம்ஸ் கேமரூன் பார்த்ததாக கூறியதும் மெய்சிலிர்த்து போனார் எஸ்.எஸ். ராஜமௌலி. நீங்கள் இப்போது டாப் ஆஃப் தி வேர்ல்ட்ல இருக்கிறீர்கள். உங்க நாட்டு மக்களின் உணர்ச்சிகளையும், சுதந்திரத்தையும் மிகவும் சிறப்பாக கொடுத்து உள்ளீர்கள்.


இந்த நாட்டில் உங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் ஒரு கூடுதல் போனஸாக இருக்கும் என கூறி ராஜமௌலியின் உழைப்பை வெகுவாக பாராட்டினார் ஜேம்ஸ் கேமரூன். நீங்கள் என்னுடைய படத்தை பார்த்தீர்கள் என்பதையும் அதை பற்றி நீங்கள் நேர்மறையான விமர்சனம் கொடுப்பதையும் என்னால் நம்ப முடியவில்லை. விருதை காட்டிலும் இது மிக பெரிய பாராட்டாக கருதுகிறேன் என்றார் ராஜமௌலி. 


 






 


நான் ஹெல்ப் செய்கிறேன்:

மேலும் ஜேம்ஸ் கேமரூன் இயக்குனர் ராஜமௌலியின் காதருகே சென்று ஹாலிவுட்டில் படம் பண்ணும் எண்ணம் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நான் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறேன் என்றுள்ளார். இது நமது இந்திய இயக்குனருக்கு கிடைத்து மிக பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது. இந்த பாராட்டை காட்டிலும் வேறு எதுவும் எனக்கு பெரிது அல்ல என ராஜமௌலி சொல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.