ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துள்ளன. உலகளவில் ரசிகர்களை கவர்ந்த இப்படம் உருவான பின்னணியை தெரிந்துகொள்ளலாம் 


அவதார் படம் உருவான பின்னணி 




ஜேம்ஸ் கேமரூன் இயக்கி 1997 ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் படத்திற்கு முன்பே ஜேம்ஸ் அவதார் படத்திற்கான ஐடியா அவருக்கு இருந்தது.  டைட்டானிக் திரைப்படத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அவதார் படப்பிடிப்பு தனது அடுத்த திரைப்படமாக இருக்கும் என்று அறிவித்தார்.

டைட்டானிக் மிகச் சிறப்பாக சாதித்தது (அது அனைத்து காலங்களிலும் அதிகமாக வசூலித்த திரைப்படமாக மாறியது. அதுவரை எந்த திரைப்படமும் செய்யாத வசூலையும் விருதுகளை இப்படம் வாரி குவித்தது. இதனால் அவதார் திரைப்படத்தை தனது அடுத்தபடமாக கேமரூன் அறிவித்தார். டைட்டானிக் படத்தின் வெற்றியால் அவதார் படத்திற்கு தேவையான பட்ஜெட்டில் இயக்குநருக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. ஆனால் இப்படத்தை உருவாக்குவதற்கான தொழில்நுட்பம் அன்றைய சூழலில் இல்லை என்பதை அவர் உணர்ந்துகொண்டார் "உணர்வுகளை பிடிக்க கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் போதாது" என ஜேம்ஸ் கேமரூனின் வார்த்தைகள் அவருக்கு இருந்த தெளிவை உணர்த்துகிறது


மெய்நிகர் படப்பிடிப்பு(virtual filming)




ஒருபக்கம் லைவ் ஆக்‌ஷன் இன்னொரு பக்கம் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட உலகம் என இரண்டையும் நுணுக்கமாக இணைந்து பார்வையார்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுப்பதே ஜேம்ஸ் கேமரூனின் நோக்கமாக இருந்தது . தனது மற்ற படங்களைக் காட்டிலும் இப்படத்தில் அதிகப்படியான நேரத்தையும் உழைப்பையும் செலுத்தினார். 

இதனை சாதிக்க, கேமரன், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் இயக்குநர் பீட்டர் ஜாக்சன் தொடங்கிய முன்னோடியான டிஜிட்டல் எபக்ட்ஸ் நிறுவனமான வெட்டா டிஜிட்டல் மற்றும் மெய்நிகர் தயாரிப்பு மேற்பார்வையாளர் க்ளென் டெர்ரியுடன் இணைந்தார். வெட்டாவின் உதவியுடன், கேமரன் படப்பிடிப்பு செய்யும் புதிய முறையை கண்டுபிடிக்க பெரும் புதுமை செய்தார்.


மெய்நிகர் எதார்த்தம்




க்ளென் டெர்ரி மற்றும் எஃபெக்ட்ஸ் குழு, ஜேம்ஸ் கேமரனுக்கு நடிகர்கள் டிஜிட்டல் காட்சியுடன் நேரடியாக எப்படி ஈடுபடுகின்றனர் என்பதை பார்க்க முடியுமாறு ஒரு மெய்நிகர் உண்மைக் கேமராவை உருவாக்கினர். அந்த “கேமரா”-வில் லென்ஸ் எதுவும் இல்லை; மாற்றாக, ஒரு எல்.சி.டி திரை மற்றும் நடிகர்களுடன் தொடர்புடைய அதன் நிலையை படிக்கும் மார்க்கர்களுடன் செயல்பட்டது. இதன் மூலம், நடிகர்கள் 360 டிகிரிகளில் பதிவு செய்யப்பட்டனர், ஆனால் கேமரா இறுதியாக எந்த இடத்தில் அமைக்கப்படும் என்பதை அவர்கள் அறியவில்லை. கேமரன் இதைப் பற்றி, “நான் விண்வெளியில் பறக்க விரும்பினாலும், அல்லது என் பார்வைமுறையை மாற்றிக்கொள்ள விரும்பினாலும், அதை செய்ய முடியும்” என்று கூறினார். இந்த அமைப்புடன் அவதார் படத்தை படமாக்குவது மிகவும் முக்கியமானதாய் இருந்தது, ஏனெனில் பெரும் பகுதியை டிஜிட்டல் முறையில் உருவாக்க வேண்டியிருந்தது. சில தகவல்களின் படி, இந்த படத்தின் வெறும் 25% மட்டுமே பாரம்பரிய நேரடி செயல் காட்சித் தளங்களை பயன்படுத்தியது.


மொஷன் கேப்சரிங்


முன்பே ராபர்ட் ஜெமிக்கிஸ் படங்களில் மோஷன் கேப்ச்சரிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தாலு இந்த தொழில்நுட்பத்தின் முழு சாத்தியப்பாடுகளை பயன்படுத்தியது அவதார் படத்தில் தான்  நடிகர்களின் நுணுக்கமான உணர்ச்சிகள் கூட இதன் மூலம் படம்பிடிக்கப்பட்டது


கதையுலகம் 




பாண்டோரா எந்த மாதிரியான சூழலை தர வேண்டும்? கேமரூன் ஒரு முழு கற்பனைச் சொந்தமான தாவரங்கள், உயிரினங்கள், மற்றும் அற்புதமான சுற்றுப்புறம் உருவாக்கினார். இவையெல்லாம் 3D கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் "இயற்கையாக" தோன்றின.


நடிப்பு


ஜோயி சால்டானா (நெய்டிரி), சாம் வொர்திங்டன் (ஜேக் சல்லி) ஆகியோர் முழுக்க முழுக்க  மொஷன் கேப்சரில் நடித்தனர்.
இவர்களின் உடல் மொழி, கண்கள், உணர்வுகள் எல்லாம் நயமாக பதிவானது.


இப்படம் 60 சதவீதம் விஷுவல் எஃப்க்ஸ் மற்றும் 40 சதவீதம் நிஜ நடிகர்கள் மற்றும் நிஜ செட் அமைத்து உருவாக்கப்பட்டது. உலகளவில் இப்படம் 237 மில்லியன் டாலஸ் வசூல் செய்தது


பின் குறிப்பு : இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சினிமாஜெம்ஸ் எக்ஸ் தளம் மூலம் பெறப்பட்டவை