ஆக்ஸ்ட்  மாதத்தில் வெளியாக இருக்கும் முக்கியமான படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.


ஜெயிலர்



சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷ்ராஃப், விநாயகன், யோகிபாபு, ஷிவ ராஜ்குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.


பாட்னர்



கோலி சூர்யா பிரகாஷ் தயாரித்து மனோஜ் தாமோதரன் இயக்கியிருக்கும் படம் பாட்னர். ஆதி பினிஷெட்டி, ஹன்சிகா மோத்வானி, யோகி பாபு ஆகியவர்கள் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஷபீர் அஹமத் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


 போலா ஷங்கர் (Bhola Shankar - தெலுகு)



சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் போலா ஷங்கர். தெலுங்கு சினிமாவில் அதிக எதிர்பார்ப்புகளோடு வெளியாகும் படங்களில் ஒன்று. வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி



நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மிஸ் ஷெட்டி - மிஸ்டர் பொலிஷெட்டி. யுவி க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் மகேஷ் இயக்குகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகிறது. வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


Talk To Me (ஆங்கிலம்)



அலெக்ஸாண்ட்ரா ஜென்சன், ஜோ பேர்ட் நடித்து டேனி ஃபிலிப்போ மைக்கேல் ஃபிலிப்போ இயக்கியிருக்கும் ஹாரர் திரைப்படம்தான் ‘டாக் டூ மீ’. ஆகஸ்ட் 4ஆம் தேதி நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.


ஹார்ட் ஆஃப் ஸ்டோன் (heart of stone)



மிஷன் இம்பாசிபிள் படத்தின் தயாரிப்புக் குழு மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் இணைந்து வழங்கியுள்ள படம் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் (heart of stone). கால் கடோட், ஆலியா பட்  ஜேமீ டோர்னன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.


ஒ.எம்.ஜி (OMG – OH MY GOD - இந்தி )



அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ஒ.எம்.ஜி (OMG – OH MY GOD ). ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற  இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி  கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அக்‌ஷய் குமார், பங்கஜ் த்ரிப்பாதி, யாமி உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஒருசேர சர்ச்சைக்குள்ளாகியது. ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளின் வெளியாக இருக்கிறது.