Jailer Audio Launch LIVE updates : ரஜினி, நெல்சன், அனிருத் காம்போவில் வெளியாக காத்திருக்கும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை தொடங்கவுள்ளது. அந்நிகழ்வு குறித்த அப்டேட்களை இங்கு காணலாம்.
தனுஷ்யாLast Updated: 28 Jul 2023 10:44 PM
Background
Jailer Audio Launch LIVEஜெயிலர்நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த்...More
Jailer Audio Launch LIVEஜெயிலர்நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் இசைவெளியீடு இன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.யார் சூப்பர்ஸ்டார்ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என்கிற கேள்வி சமீபகாலமாக அதிகம் எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் விஜய்யை சூப்பர்ஸ்டார் என்று அழைத்தது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. எல்லா காலமும் சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.இதனை நிரூபிக்கும் வகையில் இன்று ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் ரசிகர்கள் மற்றும் நடிகர்கள் அனைவரும் ஒரே சூப்பர்ஸ்டார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக பேசுவார்கள் என்று சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது. ஒட்டுமொத்த அரங்கமும் ஒரே சூப்பர்ஸ்டார் என்று அதிரப்போகும் அந்தத் தருணத்திற்காக ரஜினி ரசிகர்கள் காத்திருக்கிறார்களாம்!சவால் விடும் ஹுக்கும் பாடல் வரிகள்ஜெயிலர் படத்தின் முதல் பாடல் காவாலா வெளியாகி உற்சாகமான ஒரு வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் உண்மையான சம்பவம் இரண்டாவது பாடலான ஹுக்கும் வெளியானபோது தான் நிகழ்ந்தது. சுப்பர் சுப்பு எழுதிய இந்தப் பாடலில் பல உள்குத்துக்களை வரிகள் நிறைந்திருந்தன. மேலும் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்திற்காக நிகழும் போட்டியை பாடலில் இணைத்திருந்தார் பாடலாசிரியர். இதனால் ரஜினி ரசிகர்கள் இந்தப் பாடலின் வரிகளை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.என்ன மெசேஜ் சொல்லப்போகிறார் ரஜினி?ஒவ்வொரு முறை மேடையேறும் போதும் தனது வாழ்க்கை அனுபவங்களில் இருந்து ரசிகர்களுக்கு பல முக்கியமான கருத்துக்களை ரஜினி சொல்வது வழக்கம். நகைச்சுவை கலந்து அவர் சொல்லும் கதைகளை விரும்பி கேட்கும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்று ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டில் பேசப்போகும் ரஜினி, என்ன மெசேஜ் சொல்லப்போகிறார் என்பதை தெரிந்துகொள்ள ஆவலாகக் காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்!
Jailer Audio Launch LIVE: வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும்.. ரஜினியை இடைமறித்து அரங்கை அதிரவைத்த ரம்யா கிருஷ்ணன்
சூப்பர் ஸ்டார் பேசிக்கொண்டு இருக்கும்போது இடைமறித்து பேசிய ரம்யா கிருஷ்ணன், வயசானாலும் உன் அழகும் உன் ஸ்டைலும் உன்னவிட்டு போகாது; கூடவே பொறந்தது என்னைக்கும் போகாது என கூறியதால் மைதானம் கைத்தட்டலால் அதிர்ந்தது.
Jailer Audio Launch LIVE: சூப்பர் ஸ்டார் டைட்டில் என்னைக்குமே தொல்லைதான் - ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் டைட்டில் என்பது எப்போதும் தொல்லைதான் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஹுக்கும் பாடலில் சூப்பர் ஸ்டார் என இருந்ததைப் பார்த்து முதலில் எடுக்கச் சொன்னேன்.
காகங்களும் மற்ற பறவைகளும் அனைவரையும் தொந்தரவு செய்தது. அதில் ஒரு காகம், கழுகு ஒன்றை தொடர்ந்து தொந்தரவு செய்தது. ஆனால் காகத்தை அந்த கழுகு எதுவும் செய்யவில்லை. மாறாக கழுகு அதைப்பற்று கவலைப் படாமல் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிடும். காகத்தால் ஒரு கட்டத்துக்கு மேல் கழுகுடன் இணைந்து பறக்கவும் முடியாது போட்டி போடவும் முடியாது என கூறியுள்ளார்.
Jailer Audio Launch LIVE: நெல்சன் தன்னிடம் கதை சொன்னது குறித்து மனம் திறந்த ரஜினிகாந்த்!
நெல்சன் எனக்கு ஒரு கதை சொன்னார். எனக்கு அந்தக் கதை பிடிச்சிருக்குனு சொன்னேன். பீஸ்ட் ஷூட்டிங் முடிந்து 10 நாள்களில் விரிவாக கதை சொல்வதாக கூறினார். 10 நாளைக்குப் பின் பீஸ்ட் ஷூட் முடிஞ்சு வந்து கதை சொன்னார் . அற்புதமாக இருந்தது.
Jailer Audio Launch LIVE: நெல்சன் தன்னிடம் கதை சொன்னது குறித்து மனம் திறந்த ரஜினிகாந்த்!
நெல்சன் எனக்கு ஒரு கதை சொன்னார். எனக்கு அந்தக் கதை பிடிச்சிருக்குனு சொன்னேன். பீஸ்ட் ஷூட்டிங் முடிந்து 10 நாள்களில் விரிவாக கதை சொல்வதாக கூறினார். 10 நாளைக்குப் பின் பீஸ்ட் ஷூட் முடிஞ்சு வந்து கதை சொன்னார் . அற்புதமாக இருந்தது.
பீஸ்ட் படம் சரியாக ஓடவில்லை, ஆனால் பாக்ஸ் ஆஃபீஸில் கலெக்ஷன் அள்ளியது. விநியோகிஸ்தர்கள் இயக்குநரை மாற்றச் சொன்னார்கள். ஆனால் நான் நெல்சன் தான் இயக்குநர் என்பதில் உறுதியாக இருந்தேன்.
Jailer Audio Launch LIVE: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு
நெல்சன் எனக்கு ஒரு கதை சொன்னார். எனக்கு அந்தக் கதை பிடிச்சிருக்குனு சொன்னேன். பீஸ்ட் ஷூட்டிங் முடிந்து 10 நாள்களில் விரிவாக கதை சொல்வதாக கூறினார். 10 நாளைக்குப் பின் பீஸ்ட் ஷூட் முடிஞ்சு வந்து கதை சொன்னார் . அற்புதமாக இருந்தது.
Jailer Audio Launch LIVE: என் கேரியரை உயர்த்தியவர்கள் வரிசையில் நெல்சன் - ரஜினி
முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ் போன்ற இயக்குநர்கள் என் கேரியரை உயர்த்தியவர்கள், இப்போது நெல்சனும் இந்தப் பாதையில் இருக்கிறார்.
Jailer Audio Launch LIVE: நடிகர் விஜய் எனக்கு நம்பிக்கை அளித்தார் - நெல்சன் நெகிழ்ச்சி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ‘ஜெய்லர்’ கதை சொல்வதற்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால், பயப்படமான அவரிடம் கதை சொல்ல எனக்கு நம்பிக்கை அளித்தது விஜய் சார். போய் கதை சொல்லு; நல்லாயிருக்கும்.” - நெல்சன் திலீப்குமார்
Jailer Audio Launch LIVE: ”ரஜினி சார்கூட இருந்தா எங்க அப்பாகூட இருந்த மாதிரி இருக்கு" - விக்னேஷ் சிவன்
ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் "ரஜினி சார்கூட இருந்தா எங்க அப்பாகூட இருந்த மாதிரி இருக்கு" என விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
Jailer Audio Launch: ஒன்ஸ்மோர் கேட்ட ரசிகர்கள்... மீண்டும் ஃபையரைக் கிளப்பிய அனிருத்
ஹுக்கும் பாடலை ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்க அனிருத் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாடலை மீண்டும் அரங்கேற்றம் செய்து தனது ஃபேன் - பாய் மொமண்ட்டால் ஃபையர் விட்டுள்ளார்.
Jailer Audio Launch LIVE: தளபதிக்குப் பின்னர் தான் சூப்பர் ஸ்டாரா?
வி.டி.வி. கணேஷ் பேசுகையில் படப்பிடிப்பு தளங்களில் நடிகர் விஜய்க்கு பின்னர் மிகவும் அமைதியாக நடந்துகொள்ளக்கூடிய நடிகராக ரஜினிகாந்த் இருப்பதாக கூறியுள்ளார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேடைக்கு வந்த நகைச்சுவை நடிகர் கிங்ஸ்லி, எல்லாருக்கும் வணக்கம், இயக்குநர் நெல்சனுக்கு வணக்கம், தலைவனோட தலைவன் அனிருத்துக்கு வணக்கம், வொண்டர் வுமன் காவ்யாவுக்கு வணக்கம் என தனது பேச்சை துவங்கும் போதே நேரு விளையாட்டரங்கம் சிரிப்பலையில் குலுங்கியது.
Jailer Audio Launch LIVE: அனிருத் பெஸ்ட்ட கொடுத்திருக்கார்... ரஜினிக்கு இன்னொரு மகன் மாதிரி.. விக்னேஷ் சிவன்!
“அனிருத்தும் ரஜினிகாந்துக்கு மகன் போன்றவர் தான். அனிருத் தன் பெஸ்ட்டை இந்தப் படத்துக்காக கொடுத்துள்ளார்” என இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியுள்ளார். ஜெயிலர் படத்தில் ‘ரத்தமாறே’ எனும் பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்
Jailer Audio Launch LIVE : காவாலா பாடலுக்குத் தயாராகும் தமன்னா...
ஜெயிலர் படத்தின் முதல் பாடலாக வெளியிடப்பட்ட காவாலா பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. வழக்கம்போல ஒரு மாஸான பாடலை வெளியிடாமல் முதல் முறையாக கதாநாயகியை மையப்படுத்திய பாடல் ஒன்று வெளியிடப்பட்டு அந்தப் பாடல் கோடிக் கணக்கான பார்வையாளர்களை இணையதளத்தில் எட்டியுள்ளது. இந்தப் பாடலில் தமன்னாவின் டான்ஸ் மூவஸ் அனைவரையும் கவர்ந்த நிலையில் இன்று மேடையில் ரசிகர்கள் லைவாக தமன்னா இந்தப் பாடலுக்கு பெர்ஃபார்ம் செய்வதைப் பார்க்க காத்திருக்கிறார்கள். தமன்னாவும்ச் ரெடி தான்......
Jailer Audio Launch LIVE : மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மேடையேறப்போகும் ரஜினிகாந்த்
தனது படத்தின் நிகழ்ச்சி ஒன்றுக்காக ரஜினி மேடையேறியது கடைசியாக 2020 ஆண்டு தர்பார் படத்தின் இசை வெளியீட்டின்போது. அதற்கு பிறகு கிட்டதட்ட மூன்றரை ஆண்டுகள் கழித்து ரஜினியின் பேச்சைக் கேட்க இன்று நேரு அரங்கத்தில் இன்று திரண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள் மக்களே.
Jailer Audio Launch LIVE : ஆறிலிருந்து அறுபதுவரை...ரஜினி பாடல்களுக்கு வைப் செய்யும் ரசிகர்கள்
ஜெயிலர் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பல்வேறு வயதினை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். மேடையில் ஒலிக்கும் அதாண்டா இதாண்டா அருணாச்சலம் பாடலுக்கு ஆறில் இருந்து அறுபதுவரை இருக்கும் ரசிகர்கள் ஆடிப்பாடி வைப் ஆகிவருகிறார்கள்
Jailer Audio Launch LIVE : சூப்பர்ஸ்டார் மனைவி லதா மற்றும் மகள் செளந்தர்யா வருகை...
ரஜினியின் சகோதரரைத் தொடர்ந்து தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த மற்றும் அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் அரங்கத்திற்கு வந்துள்ளார்கள்
Jailer Audio Launch LIVE : நிகழ்ச்சியை ரசிகர்கள் லைவாக பார்க்கனுமா...
ஜெயிலர் இசை வெளியீட்டை அரங்கத்திற்கு செல்ல முடியாத ரசிகர்கள் லைவாக காணும் வகையில் சன் பிக்சர்ஸ் நிருவனத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்புகிறது. அனல் பறக்கும் மேடையை வீட்டிலிருந்தபடியே பாருங்கள்.
Jailer Audio Launch LIVE : அலப்பற கெளப்புறோம் ....தலைவரு நிரந்தரம்.....
ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலாக வெளியிடப்பட்ட அலப்பற கெள்ப்புறோம் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேறபைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் பாடலை மேடையில் லைவாக பாட இருக்கிறார் படத்தின் இசையமைப்பாளர் அனிருத். ஒரு சின்ன டிரைலர் பாருங்களேன்
Jailer Audio Launch LIVE : மூன்றாவது முறையாக ரஜினி அனிரூத் கூட்டனி
பேட்ட மற்றும் தர்பார் படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரஜினி படத்திற்காக இசையமைத்துள்ளார் அனிரூத். முந்தைய இரண்டு படங்களில் மாஸான பாடல்களை கொடுத்த அனிரூத் இந்த முறையும் மிரட்டியுள்ளார்.
Jailer Audio Launch LIVE : மேடையில் ஒலிக்கும் பொதுவாக என் மனசு தங்கம்
ஜெயிலர் இசைவெளியீட்டு நிகழ்ச்சித் தொடங்கும் வரை ரசிகர்களை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் வகையில் டிஜே அமைக்கப்பட்டு சூப்பர்ஸ்டார் ரஜினி படங்களின் பாடல்கள் ஒலிபரப்பப் படுகின்றன. ரஜினி நடித்த முரட்டுக்காளைப் படத்தில் இடம்பெற்ற பொதுவாக என் மனசு தங்கம் பாடல் ஒலிக்க ரசிகர்கள் உற்சாகத்தில் கூச்சலிட்டனர்
Jailer Audio Launch LIVE : நான்காவது முறையாக சன் பிக்சர்ஸுடன் இணையும் ரஜினி
ஏற்கனவே ரஜினி நடித்த எந்திரன், பேட்ட, அன்னாத்த படங்களைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் நான்காவது முறையாக ரஜியின் ஜெயிலர் படத்தை தயாரித்து வழங்கியுள்ளது.
Jailer Audio Launch LIVE : அசத்தும் ரெட் கார்பெட்....ரஜினி எண்ட்ரி கொடுக்கப்போகும் வழி
ஜெயிலர் இசைவெளியீட்டில் கலந்துகொள்ளும் நடிகர்கள் நடந்துவரும் வழி நெடுகிலும் சிவப்புக் கம்பளம் விரித்து இருபக்கமும் ரஜினியின் போஸ்டர்கள் வைக்கப்பட்டு மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கெத்தாக எண்ட்ரி கொடுக்கப் போகும் வழி இதுதான்
Jailer Audio Launch LIVE : என்ன மெசேஜ் கொடுக்க போகிறார் ரஜினி
ஒவ்வொரு முறையும் மேடையில் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டு அதன்மூலம் ஒரு நல்ல மெசேஜை ரசிகர்களுக்கு சொல்வது சூப்பர்ஸ்டாரின் வழக்கம். இன்று எல்லா நடிகர்களும் பேசி முடித்தப்பின் கடைசியாக களமிறங்கும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு என்ன மெசேஜ் சொல்ல போகிறார் என்று ஆர்வமாக காத்திருக்கிறார்கள் மக்கள்.
நூற்றுக்கணக்கான மக்கள் சேர்ந்து தங்களது உழைப்பை வழங்கி ஜெயிலர் இசை வெளியீட்டை சரியான நேரத்தில் தொடங்க பங்களித்திருக்கிறார்கள். தற்போது அரங்கத்தில் கூட்டம் நிறைந்து வர மேடை, லைட்ஸ், சவுண்ட் எல்லாம் தயாராகியிருக்கிறது. இனி என்ன.. ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டியது தான் மிச்சம்! நேரு அரங்கம் திருவிழா போல் காட்சியளிக்கும் புகைப்படங்கள் இதோ
Jailer Audio Launch LIVE : ரசிகர்களால் நிறையும் அரங்கம்
ஜெயிலர் இசைவெளியீட்டு நிகழ்ச்சியை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் கூடி வருகிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கும் நிகழ்ச்சிக்கு மக்கள் கூட்டம் நிறம்பியபடி இருக்கிறது.
Jailer audio launch live : சூப்பர்ஸ்டாருக்காக தயாராகிவரும் மேடை
ஜெயிலர் படத்தின் இசைவெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. ரஜினிகாந்தின் பேச்சால் அதிர இருக்கும் இந்த மேடையை தயார் செய்ய ஏராளமான மனிதர்கள் தங்களது உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் உழைப்பை பாராட்டும் வகையில் படக்குழு வெளியிட்ட வீடியோ இதோ.
Jailer audio launch live : ஜெயிலர் படத்தின் ஜூக்பாக்ஸ் 7 மணியளவில் வெளியிடப்படும்
ஜெயிலர் படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் படத்தின் அனைத்துப் பாடல்களையும் உள்ளடக்கிய ஜூக்பாக்ஸ் இன்று 7 மணியளவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Jailer audio launch live : ஆரம்பத்திலேயே கவனத்தை ஈர்த்த ஜெயிலர்!
பீஸ்ட் படம் நெகடீவான விமர்சனங்களை பெற்ற பின், ஜெயிலர் பட வாய்ப்பை நெல்சன் இழந்துவிட்டார் என்ற தகவல் பரவலாக பகிரப்பட்டது. பின், அது வெறும் வதந்தி என அதிகாரப்பூர்வ தகவல் வந்தது.