Jaibhim Manikandan On Kamalhaasan | ”கூட்டத்துல நிக்குற ஆளா இருந்திருக்கேன்.. இப்போ இப்படி கேட்டாரு..” : நெகிழும் ஜெய்பீம் மணிகண்டன்..

கமல் சாரோட தூங்காவனம், விஸ்வரூபம் படத்துல கூட்டத்துல நிக்குற ஆளா டப்பிள் ஆர்டிஸ்ட் வேலைபார்த்த, எனக்கு இதை விட பெரிய சந்தோஷம் வேற என்ன இருக்கப்போகுது என்று நெகிழ்ந்து பேசியுள்ளார்.

Continues below advertisement

சினிமாத்துறையில் என்னோட வாத்தியரான கமல் சார் பாராட்டியதை விட உலகில் வேறு என்ன சந்தோஷம் எனக்கு இருக்கப்போகிறது என நெகிழ்வுடன் பகிர்கிறார் ஜெய்பீம் நாயகன் மணிகண்டன்.

Continues below advertisement

எத்தனையோ பொருள்செலவில் படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் இன்றைக்கு எதார்த்த சினிமாக்கள்  மற்றும் உண்மைக்கதைகள் தான் மக்களிடம் பிரபலமாகியுள்ளது. குறிப்பாக விக்ரம் வேதா, காதலும் கடந்தும் போகும், சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் மக்களின் மிகவும் பிரபலமாகால் இருந்த மணிகண்டன் தான் தற்போது வெகு ஜன மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்தளவிற்கு நடிப்பாரா? என உண்மையான திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய படம் தான் ஜெய்பீம். இந்தப்படத்தின் மூலம் பல படங்களில் தற்போது பிசியாக நடித்துவருகிறார்.

அப்படி சில தினங்களுக்கு முன்தாக திரையரங்குகளில் வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்  மணிகண்டன்.. இப்படத்தைத் திரையில் பார்த்த கமல் நல்ல கதையம்சத்துடன் இயக்கப்பட்டிருப்பதால் சில நேரங்களில் சில மனிதர்கள் படக்குழுவை அழைத்துப் பாராட்டியுள்ளார். இதில் நடித்த மணிகண்டனை நேரில் அழைத்துப் பாராட்டியதோடு, உங்களின் அடுத்த படம் என்ன என்பது வரை கேட்டிருக்கிறார்.

இதனையடுத்து இந்த சந்திப்புக் குறித்து பகிர்ந்த மணிகண்டன், ”கமல் சார் திரையுலகின் வாத்தியார் எனவும் அவரை சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும் கூறியுள்ளார். இதோடு கமல் சாரோட தூங்காவனம், விஸ்வரூபம் படத்துல கூட்டத்துல நிக்குற ஆளா டப்பிள் ஆர்டிஸ்ட் வேலை பார்த்த எனக்கு இதை விட பெரிய சந்தோஷம் வேற என்ன இருக்கப்போகிறது” என்று நெகிழ்ந்து பேசியுள்ளார்.

மேலும் முன்னதாக சூது கவ்வும் படத்தைப்பார்த்து விட்டு டீமைக் கூப்பிட்டு பேசினார். ஆனால் அப்போது நான் சினிமாத்துறைக்கு புது என்பதால் பெருசா சார்கிட்ட எதுவும் பேசமுடியல எனக்கூறிய அவர், ஜெய்பீம் படத்த பார்த்துவிட்டு என்னை மிகவும் பாரட்டியது பெருமையாக இருந்தது. இப்ப சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தைப் பார்த்துட்டு எங்களது டீமை கூப்பிட்டு பாராட்டினார். இதை விட என் உலகத்துல எனக்கு கிடைத்த சந்தோஷம் வேறில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

”சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் ஆடியோ லான்ச் அப்போ கமல் வந்திருந்தார். ஆனால் அந்த நேரத்துல கேரளாவுல ஷூட்டிங்ல இருந்ததுனால என்னால் அந்த நிகழ்ச்சியில பங்கேற்க முடியாமல் இருந்தது. இதுவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்த வந்த நிலையில்தான்  இப்ப கமல் சார் என்னை நேர்ல கூப்பிட்டு பேசினது என்னோட கவலையெல்லாம் பறந்தோடிடுச்சு” என மகிழ்வுடன் ஜெய்பீம் மணிகண்டன் பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola