விஜய் ஆண்டனி நடித்துள்ள சக்தி திருமகன்
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”. இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் விஜய் ஆண்டனியின் பிறந்த நாளன்று 24.07.2025 பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் விஜய் ஆண்டனி, அருண் பிரபு, தனஞ்செயன், கார்த்திக் நேத்தா, திருப்தி, அரவிந்த் ராஜ் மற்றும் படக்குழுவில் பலரும் கலந்துக் கொண்டு இவ்விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.
இயக்குனர் அருண் பிரபு பேசியபோது
பொதுவாகவே எனக்கு ஜனரஞ்சகமான அரசியல் படம் பார்க்க எனக்கு பிடிக்கும், அப்படிபட்ட படம் தான் சக்தித் திருமகன் படமும். அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் இப்படம் இருக்கும். ஒரு கதையை சொல்லும்போது ஒரு பதட்டம் எப்போதுமே இருக்கும். அந்த படத்தில் ஹீரோயிசமும் இருக்கும். அதை இப்படத்தில் நான் இயக்கியுள்ளேன். அருவி படத்தில் எந்த அளவிற்கு உழைத்தோமோ அதே உழைப்பு தான் இப்படத்திலும் செய்திருக்கிறேன். இப்படத்திற்கும் உங்களின் ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கிறேன் நன்றி, என்றார்.
மீண்டும் இசையில் கவனம் செலுத்தப்போகிறேன்
நான் எப்போதுமே வேலை வேலை என்று வேலையில் கவனம் செலுத்துவதனால் எனக்கு பத்திரிகை நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் தான் நான் சமீபத்தில் கொடுக்கும் அனைத்து நேர்காணல்களிலும் மிகவும் காமெடியாகவும், ஜாலியாகவும் பதிலளித்துக் கொண்டிருக்கிறேன்.
தமிழ் சினிமாவில் நான் டாப் 5 படங்களில் அருவி ஒரு படம். அதே போல் இந்திய அளவில் டாப் 3 இயக்குனர்களில் அருண் பிரபு ஒருவர். சர்வதேச அளவில் படம் எடுக்கக் கூடிய வல்லமை அவருக்கு இருக்கிறது. எப்போது அருண் வந்தாலும் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் அவருக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அவருக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு தயாராக இருக்கிறேன்.
ஷெல்லியின் சப்போர்ட் இல்லாமல் அருண் பிரபு அவர்களால் அருவியை செய்திருக்க முடியாது. சில்லி அருணுக்கு மனைவி போன்றவர். இவர்கள் இருவரும் இணைந்து பெரிய அளவில் படங்களை உருவாக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். அருண் பிரபு அடுத்து இயக்கும் படம் பெரிய படமாக தான் இருக்க வேண்டும்.
கார்த்திக் நேத்தா அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எப்போதுமே மகிழ்ச்சியான தருணமாக தான் இருந்திருக்கிறது. நான் சில காலமாக இசையமைப்பதில் கவனம் செலுத்தவில்லை. சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டிற்கு பின்பு நான் மீண்டும் இசையில் கவனம் செலுத்தவுள்ளேன் அப்போது மீண்டும் கார்த்திக் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.
நடிப்பை கைவிடுகிறாரா விஜய் ஆண்டனி ?
அருண் பிரபு எப்போதுமே கதாநாயகியை தேர்வு செய்வதில் தனித்தன்மையாக இருப்பார். அவர் படங்களில் இருக்கும் நாயகிகள் பக்கத்து வீட்டு பெண்கள் போல தான் இருப்பார்கள். அதுபோலத்தான் இந்த படத்திற்கும் யாரை தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாள் திருப்தியை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவரும் மிகவும் நன்றாக இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார். அவர் மென்மேலும் வளர வாழ்த்துகள். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்." என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
மீண்டும் இசையில் கவனம் செலுத்த இருப்பதாக விஜய் ஆண்டனி கூறியுள்ளது ரசிகர்களிடம் அவர் நடிப்பை கைவிடப் போகிறாரா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது