தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை மற்றும் தயாரிப்பாளர் லக்‌ஷ்மி மஞ்சு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரபல நடிகருடனான விவாகரத்திற்கு பின் நடிகைக்கு யாரும் நடிக்க வாய்ப்பு தரவில்லை என தயாரிப்பாளர் லக்‌ஷ்மி மஞ்சு இந்த பேட்டியில் தெரிவித்தார். பலர் அவர் சமந்தாவை குறிப்பிட்டே இப்படி சொன்னதாக கூறுகிறார்கள். 

Continues below advertisement

விவாகரத்திற்கு பின் பட வாய்ப்பு இல்லை

லக்‌ஷ்மி மஞ்சு அளித்த பேட்டியில் " தெலுங்கின் சூப்பர்ஸ்டார் நடிகரின் முன்னாள் மனைவி ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு விவாகரத்து ஆகியது. இதன் பின் அவருக்கு யாரும் பட வாய்ப்புகள் தருவதில்லை. ஏற்கனவே அவர் நடிக்க இருந்த படங்களும் கைவிட்டு போயின. அந்த நடிகைக்கு பட வாய்ப்பு கொடுத்தால் அந்த நடிகர் ஏதாவது நினைத்துக் கொள்வார் என பலர் கூறுகிறார்கள். ஆனால் அந்த நடிகை வேலை செய்வதற்கு தயாராக இருக்கிறார். ஒரு ஆணுக்கு இது போல் நடக்காது. ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. திருமணமாகிவிட்டது என்றால் குழந்தைகள், உறவினர்கள் என எல்லா பொறுப்புகளையும் அவர் சுமக்க வேண்டும். " என லக்‌ஷ்மி மஞ்சு தெரிவித்தார் .

Continues below advertisement

தெலுங்கு சினிமாவில் புறக்கணிக்கப்படுகிறாரா சமந்தா

வெளிப்படையாக பெயர் சொல்லாவிட்டாலும் லக்‌ஷ்மி மஞ்சு சமந்தாவை குறிப்பிட்டு சொன்னதாக சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. கடைசியாக 2023 ஆம் ஆண்டு சமந்தா நடித்த சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய இரு படங்கள் வெளியாகின. அமேசான் பிரைம் தயாரித்த சிடெடல் தொடர் ஓடிடியில் வெளியானது. இதன்பின்  மையோசிடிஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது தொடர்ந்து தனது உடல் நலத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதனால் ஓராண்டு காலம் அவர் நடிப்பில் இருந்து இடைவேளை எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். தற்போது தெலுங்கில் ரக்த் பிரம்மாண்ட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்த சமந்தாவிடம் தற்போது கைவசம் ஒரே ஒரு படம் தான் உள்ளது. இதனால் நாகசைதன்யாவுடனான விவாகரத்திற்கு தெலுங்கு திரையுலகில் சமந்தா புறக்கணிக்கப்படுகிறாரா என்கிற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது

சமந்தா நாக சைதன்யா விவாகரத்து

சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். நான்கு ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின் இருவரும் விவாகரத்து செய்துகொண்டார்கள். நாக சைதன்யா நடிகை ஷோபிதாவை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சமந்தா பிரபல இயக்குநர் ராஜ் நிதிமோருவை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தாலும் இதுகுறித்து அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.