தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி ஒரு மாபெரும் சாதனையை படைத்த ஒரு திரைப்படம் "விக்ரம்". லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பிளாக் பஸ்டர் சூப்பர் ஹிட் திரைப்படம். இப்படம் ஒட்டுமொத்த திரையுலகமும் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய "கைதி" படத்தின் கதாபாத்திரங்களை "விக்ரம்" திரைப்படத்தில் இணைத்த விதம் பாராட்டைப்பெற்றது.
லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள் அவருக்கு "லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்" என்ற பெயரை வைத்ததை அடுத்து லோகேஷ் இனிவரும் படங்களில் அதை தொடர போவதாக தெரிவித்தார்.
தலைவர் #169 :
இதே பாலிசியை தற்போது ஃபாலோ செய்து வருகிறாரா இயக்குனர் நெல்சன் திலீப்குமார் என்ற யூகம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. தற்போது இயக்குனர் நெல்சன் சூப்பர் ஸ்டாரின் #169 படமான "ஜெயிலர்" திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படம் மூலம் தனது யூனிவர்ஸை தொடக்க திட்டமிட்டுள்ளார் என ஏற்கனவே கூறப்பட்டது. அது தொடர்பாக தற்போது ஒரு போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.அதில் விஜய், ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளனர்.
தொடருமா மஹாலி மற்றும் கில்லி கதாபாத்திரம்?
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான "பீஸ்ட்" திரைப்படம் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "டாக்டர்" திரைப்படத்தில் என இரு படங்களிலும் மஹாலி மற்றும் கில்லி எனும் கதாபாத்திரங்கள் இடம் பெற்று இருந்தன. இது நெல்சன் தயாரிப்பில் உருவாகிவரும் "ஜெயிலர்" திரைப்படத்திலும் தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏதாவது சம்பந்தம் உள்ளதா ?
சமீபத்தில் "ஜெயிலர்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியானது அதில் ரத்தக்கறை படிந்த கத்தி இடம்பெற்றது. இதே போன்ற கத்தி ஒன்றை "பீஸ்ட்" திரைப்படத்தில் நடிகர் விஜய் தனது வாயில் வைத்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருக்கும். இதை ரசிகர்கள் கவனத்தில் கொண்டு நெல்சன் யுனிவர்ஸ் உருவாக்க உள்ளாரா என்று யூகிக்கிறார்கள். இதுவரையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.
"ஜெயிலர்" பட குழுவினர் :
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்துடன் இணைந்து ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர் என கூறப்படுகிறது.
பொறுத்து இருந்து பார்ப்போம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் லோகேஷ் கனகராஜ் பாலிசியை ஃபாலோ செய்கிறாரா என்று.