அமீர்கானின் மகள் நேற்று தனது 25 ஆவது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். 


அமீர்கானின் முதல் மனைவியான ரீனா தத்தாவிற்கு பிறந்தவர் ஐரா கான். இவர் நேற்று தனது 25 ஆவது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அமீர்கான், ரீனா தத்தா, சகோதரர் ஜுனைத் கான், அமீர்கானின் இராண்டாவது மனைவி கிரண்ராவிற்கு பிறந்த ஆசாத் ராவ் கான், அமீர்கானின் ஃபிட்னஸ் கோச்சும் ஐரா கானின் காதலரான நுபுர் ஷிகாரே ஆகியோர் கலந்து கொண்டனர். பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 






அதில் ஐராகான் பர்த்டே கேக்கை வெட்டுவது, காதலருடன் நீச்சல் குளத்தில் குளிப்பது தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப்புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ஐராகானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.  






பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் அடுத்ததாக  'லால் சிங் சாட்டா' படம் வெளியாக இருக்கிறது. அத்வைத் சந்தா இயக்கும் இந்தப்படம் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்ஸ் நடிப்பில், 1994-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் ‘தி ஃபாரஸ்ட் கம்ப்’. ஆஸ்கர் விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை அள்ளிய இந்தத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் தான் ‘லால் சிங் சாட்டா'. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார். அமீர்கானின் நண்பராக, ராணுவ வீரராக நாக சைதன்யா நடித்துள்ளார்.