ஸ்டூடியோ கிரீன் அக்ரிமெண்ட் :
கேடிபில்லா கில்லாடி ரங்கா பட வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் செய்கிறது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம். ஆனால் படத்தை தொடங்கவில்லை. அக்ரிமெண்ட் இருப்பதால் ஒவ்வொரு படம் முடியும் போதும் சிவகார்த்திகேயனும் படத்தை துவங்க கேட்டும் அந்நிறுவனம் அசைந்து கொடுக்கவில்லை.
சிவகார்த்திகேயன் மார்க்கெட்:
இதற்கிடையே சிவகார்த்திகேயனின் மார்கெட்டும் வளர்ந்து வருகிறது. ஆண்டுகள் கடந்த பின்னும் ஸ்டூடியோ கிரீன் நிறுவன தரப்பு படத்தை துவங்குவதாக இல்லை. சிவகார்த்திகேயனும் அடுத்தடுத்து பிசியாக படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அவர் படங்கள் நன்றாக ஹிட்டாகி, பீக்கில் இருந்த சமயத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அவரை அணுகிறது. அடுத்த படத்தை தங்களுக்கு செய்து தரும் படி கேட்கிறது.
ஞானவேல் ராஜா பிளான் :
ஆனால் கேடி பில்லா பட சமயத்தில் என்ன சம்பளமோ அது தான் சம்பளம் என்று கண்டிஷன் போட, அதிர்ந்து போகிறார் சிவகார்த்திகேயன். அப்புறம் தான் தெரிகிறது தயாரிப்பு நிறுவனத்தின் திட்டமே அதுதான் என்று. சிவாவின் மார்கெட் உயரும் வரை காத்திருந்து, அதன் பிறகு குறைந்த சம்பளத்தில் அவரை வைத்து படம் எடுத்து பெரிய லாபம் பார்ப்பது. அதே சமயம் சிவாவின் மார்க்கெட்டையும் சரிப்பது.
சினிமாவைப் பொறுத்தவரை முந்தைய படத்தின் சம்பளத்தை வைத்து தான் அடுத்தடுத்த படத்திற்கு சம்பளம் வழங்கப்படும். ஆனால் சிவா இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. வேறு படங்களில் நடிக்கிறார். அதற்கு ஸ்டூடியோ கிரீன் அக்ரிமெண்டை காட்டி அதற்கும் முட்டுக்கட்டை போடுகிறது. என்னிடம் என்ஓசி வாங்காமல் சிவாவை வைத்து படம் எடுக்கக் கூடாது என மிரட்டுகிறார்.
ரெமோ திரைப்படம்:
வேறுவழியில்லாமல் சிவா தனது நண்பர் ஆர்.டி.ராஜாவை தயாரிப்பாளராக்கி ரெமோ படத்தை துவங்குகிறார். அந்தப் பட படப்பிடிப்பு, பட வெளியீடுகளில் கடுமையான பிரச்சினைகளை சந்தித்தது. அதற்கு காரணமும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தான். அப்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சைலண்டாக இருந்த காலக்கட்டம் என்பதால் திரைக்குடும்பத்தைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கை தான் ஓங்கியிருந்தது. தயாரிப்பு, வினியோகம் என ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அந்தக் குடும்பம் கையில் வைத்திருந்த காலம்.
கண்ணீர் விட்ட சிவகார்த்திகேயன்:
பல சிக்கலகளை சந்தித்த ரெமோ பட ஆடியோ லாஞ்சில் சிவா அழுதே விட்டார். சீமராஜா படத்திற்கு பிறகு சிவாவின் சம்பளத்தை ஏற்றித் தருவதாக சொல்ல உடன்பாடு ஏற்படுகிறது. ஆனாலும் அன்றைய மார்கெட் சம்பளத்தை விடவும் குறைவான சம்பளம் தான் பேசப்படுகிறது. ஆனாலும் சிவா ஒத்துக் கொள்கிறார். எப்படியாவது இதிலிருந்து வெளிவந்தால் போதும் என்று நினைத்து குறுகிய காலத்தில், ஸ்கிரிப்ட் பற்றி எந்த கவலையும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட படம் தான் மிஸ்டர் லோக்கல்.
சிவகார்த்திகேயனுக்கு வந்த பிரச்சனை:
நயன், ராஜேஷ் அனைவருமே அக்ரிமெண்ட் மூலம் லாக் செய்யப்பட்டவர்கள் தான் எனக்கூறப்படுகிறது. படத்திற்காக 15 கோடி சம்பளம் பேசப்பட்ட நிலையில், அதையும் முழுதாக கொடுக்கவில்லை. ஆனால் வருமான வரி தாக்கலில், சிவாவிற்கு 15 கோடி கொடுத்ததாக கணக்கு காட்ட, ஐடி டிபார்ட்மெண்டில் இருந்து சிவாவிற்கு நோட்டீஸ் வந்தது.
காலி செய்யும் முயற்சி:
வேறுவழியில்லாமல் சிவா கோர்ட்டில் கேஸ் போட, பணத்தை செட்டில் செய்துவிட்டு படங்களை ரிலீஸ் செய்து கொள் என்று சொல்லிவிட்டது கோர்ட். அதன் பிறகும் அந்நிறுவனமும், அதன் பின்னால் உள்ள நட்சத்திர குடும்பத்தைச் சேர்ந்த ஹீரோக்களும் சிவாவை வளர விடாமல் மார்கெட்டை காலி செய்ய முயற்சி நடந்திருக்கிறது. ஆனாலும் எவ்வளவு முயற்சித்தும் சிவாவின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை.
கங்குவா அமரன் முன் மண்ணை கவ்வியது:
தற்போது தன்னை சரிக்க நினைத்த அந்நிறுவனம் முன்பே சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்துள்ளது. அடுத்தவரை கெடுக்க நினைத்த அந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கங்குவா திரைப்படம் மண்ணைக் கவ்வியுள்ளது. அத்தோடு, அதை தயாரித்த கலைக்குடும்பமும் பணத்தை இழந்ததோடு மட்டுமின்றி கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றனர். அமரன் கெத்தாக ஓடிக்கொண்டிருக்க... கங்குவா காவு வாங்கப்பட்டிருக்கிறது.