பொழுதுபோக்கு, நகைச்சுவை, காதல், திகில், என பல கோணங்களில் படங்கள் வந்து கொண்டு இருக்கிறது. சில படங்கள் நமக்கு உத்வேகம் அளித்து நம்மை வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல உதவுகிறது. இந்த மாதிரி உத்வேகம் அளிக்கும் படங்களின் வரிசையை பார்க்கலாம்.


இன்டு தி வைல்ட் - Into The Wild – 2007 



                    


ஜான் கிராகவுர் எழுதிய நாவல் ஒளிப்பதிவாக எடுத்த திரைப்படம். ஒருவர் வாழ்வின் சுதந்திரத்தை அடிப்படையாக கொண்டு, வாழ்க்கையை வாழ்வது பற்றிய திரைப்படம். இது அழகான இடங்களில் காட்சி ஒளிப்பதிவு செய்ய பட்டு, அர்த்தமுள்ள கதைக்களத்துடன், 2007ல் வெளிவந்த திரைப்படம் தனக்கான இடத்தை பெற்றது. அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.


ஃபாரஸ்ட் கம்ப் - Forrest Gump – 1994




படம் வாழ்க்கை, காதல், மகிழ்ச்சி, மகிழ்ச்சி ஆகிய தளங்களில் பயணிக்கிறது. மாற்றுதிறனாளியாக இருந்து அதிவேகமாக ஓடுவதில் தான் விரும்பிய பெண்ணை காதலித்து, பல பிரச்சனைகளுக்கு பிறகு திருமணம் செய்து, திருமணம் முடிந்த சில நாட்களில் அவள் இறந்து விடுகிறார். பல தளங்களில் பயணிக்கும் கதையானது, பார்ப்பவர்களுக்கு கண்களில் கண்ணீர் வர வைக்கும்.


தி ஷாவ் ஷாங் ரேடெம்சன் - The Shawshank Redemption – 1994




ஆண்டி அவர்ரின் 19 ஆண்டு கால சிறைவாசம் பற்றி கதை பேசுகிறது. இதுவும் அவரின் நண்பர் ரெட்ஸின் மீட்பும், பற்றி கதையாக வருகிறது. இந்த திரைக்கதை ஊக்கமளிப்பதாகவும், நம்பிக்கை ஊட்டுவதாகவும் இருக்கிறது.


லைஃப் இஸ் பியூட்டிஃபுல் - Life Is Beautiful 1997




படத்தின் பெயர் போல வாழ்க்கை அதிஅற்புதமானது என்பதை குறிக்கிறது.வாழ்க்கையில் எந்த கஷ்டங்களும் இல்லாமல், மகிழ்ச்சியாக வாழ்வது பற்றியும், அன்பானவர்களுடன் வாழ்வது பற்றியும் திரைக்கதை அமைந்துள்ளது.


லைஃப் ஆஃப் பை - Life Of Pi – 2012




ஹைனா, ஒராங்குட்டான் மற்றும் புலியுடன் ஒருவர் இருப்பதும், அவர்களுடன் நட்பாக இருப்பது பற்றியும், திரைக்கதை நகர்கிறது. திரைப்படம் மனிதநேயம், கருணை மற்றும் மிக முக்கியமாக இயற்கையுடனான உறவைக் காட்டுகிறது. படம் ஊக்கமளிக்கவும், பொழுதுபோக்காகவும், ஒவ்வொரு காட்சியும் கண்ணனுக்கு விருந்தாக அமைகிறது.


வேகிங் லைப் - Waking Life – 2001




இது தத்துவார்த்த ரீதியான படம். இந்த படத்தின் சிறப்பம்சம், கதாநாயகன் பெயரிட படாதவர். இது அனிமேஷன் செய்யப்பட்ட படம். மிகவும், வித்தியாசமான ஒளிப்பதிவு செய்யப்பட்ட, தத்துவ படம். மிகவும், உத்வேகம் ஊட்டக்கூடியதாக இருக்கும்


பே இட் பார்வேர்ட்-  Pay It Forward – 2000



                   


கருணை மற்றும் இரக்கத்தின் முக்கியத்துவத்தை அறியும் 11 வயது சிறுவன் , அவன் திட்டத்தின் மூலம் உலகம் மாறுகிறது. இது நீங்கள் ஆசைப்படும் உலகமாக மாறுவது பற்றி திரைக்கதை நகர்கிறது. இது இப்போது இருக்கும் சுயநல உலகம் இல்லை.