எவ்வளவுதான் நாம் தைரியமான ஆள் என்று சொல்லிக்கொண்டாலும் ஒரு நல்ல திகில் படம் வெளியானால் தான் நமது தைரியம் நமக்குத் தெரியும். அண்மை காலங்களில் வெளிவந்த எந்தத் திரைப்படமும் அப்படியான ஒரு அனுபவத்தை தந்ததாக தெரியவில்லை. அந்த குறையை தீர்த்து வைக்க வருகிறது இன்ஸிடியஸ் த ரெட் டோர். 


ஹாலிவுட்டில் ஹார்ர் திரைப்படங்களின் மிகப் பிரபலமானத் திரைப்படம் இன்ஸிடியஸ். காஞ்சுரிங் திரைப்பட்த்திற்குப் பின் ஒரு திகிலான ஒரு அனுபவத்தைக் கொடுத்தப் படம் என்றால் அது இன்ஸிடியஸ் தான் . தற்போது இந்த இன்ஸிடியஸ் பிரான்சைஸின் ஆறாவது பாகம் வெளியாக இருக்கும் நிலையில் ஹாரர் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு சவால் விடுத்துள்ளது. பி.வி.ஆர். திரையரங்க நிறுவனம்.






என்ன சவால்


அது என்ன சவால் என்றால் இன்ஸிடியஸ் திரைப்பட்த்தை தனியாக திரையரங்கத்தில் பார்ப்பதற்கான தைரியம் உங்களுக்கு இருக்கிறதா என்பதே இந்த சவால். படத்தை திரையரங்கத்தில் தனியாக அமர்ந்து பார்ப்பவர்களுக்கு 5000 ரூபாய் பரிசு ஒன்றும் வழங்கப்பட இருக்கிறது பி. வி. ஆர் நிறுவனம்.


முதல் பாகம்


கடந்த 2010 ஆம் ஆண்டு இன்ஸிடியஸ் பட்த்தின் முதல் பாகம் வெளியானது.


இரண்டாம் பாகம்


முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம பாகம்கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது. இன்ஸிடியஸ் திரைப்பட்த்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை இயக்கியவர் ஜேம்ஸ் வான்.


இன்ஸிடியஸ் 3


முதல் இரண்டாம் பாகத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய லெய் வான்னல் மூன்றாம் பாகத்தை இயக்கினார்.


நான்காம் பாகம்


ஆடம் ராப்பிடல் நான்காவது பாகத்தையும் பாட்ரிக் வில்சன் ஐந்தாம் பாகத்தை இயக்கினார்.


ஆறாவது பாகம்


தற்போது இந்த பிரான்சைஸின் ஆறாம் பாகமான இன்ஸிடியஸ் த ரெட் டோர்.  வெளியாக இருக்கிறது. பாட்ரிக் வில்சன்  இந்தப் பட்த்தை  இயக்கயிருக்கிறார். பாட்ரிக் வில்சன் , டாய் சிம்கின்ஸ், லின் ஷாய் ஆகியவர்கள் நடித்துள்ளார்கள். வரும் ஜுல்ய் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது .