சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்து பிரபலமானவர் நடிகர் ரோபோ ஷங்கர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவரின் மகள் இந்திரஜா ஷங்கரும் திரைப்படங்களில் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர். பிகில் படத்தில் நடிகர் விஜய்யுடனும், விருமன் படத்தில் நடிகர் கார்த்தியுடன் நடித்துள்ளார். 


 




ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ஷங்கருக்கும் அவரின் முறைமாமன் கார்த்திக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து விறுவிறுப்பாக திருமண வேலைகள் நடைபெற்றன. திருமணத்திற்கு முன்னதாக கொண்டாட்டமாக ஹல்தி நிகழ்வு நடைபெற்றது. ஏராளமான சின்னத்திரைப் பிரபலங்கள் மற்றும் வெள்ளித்திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என நிகழ்ச்சி களைகட்டியது. அதன் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. 


அந்த வகையில் நேற்று மதுரையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ கோலாகலமாக இந்திரஜா ஷங்கர்  - கார்த்தி திருமணம் நடந்து முடிந்தது. இந்தத் திருமண வைபவத்தில் ஏராளமான திரைப் பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சோசியல் மீடியா எங்கும் இந்திரஜா ஷங்கர் - கார்த்திக் திருமணம் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றன. லைவ் வீடியோ கூட யூடியூபில் நேற்று ஒளிபரப்பானது. இந்நிலையில் இந்திரஜா ஷங்கர் கட்டியிருந்த திருமண பட்டுப்புடவை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. 


 



ரோபோ சங்கர் தன்னுடைய மகள் இந்திரஜாவின் திருமண ஏற்பாடுகளை தடபுடலாக செய்து இருந்தார். ஏற்பாடுகள் ஒரு பக்கம் இருக்க மகளின் திருமண புடவையை தங்கத்தால் நெய்துள்ளனர். ஆனால் அந்தப் புடவையின் மதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.


மதுரையில் திருமணம் நடைபெற்றதால் ஏராளமான திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ள முடியாது என்பதற்காக சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான  பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து கூறி அறிவுரை வழங்கினார் நடிகர் சூரி. ரூபாய் கட்டை மொய்யாக மணமக்களுக்கு வழங்கியதும் என்ன கவர் வெயிட்டாக இருக்கிறது என ரோபோ சங்கர் கலாய்க்க அங்கிருந்து சொந்தபந்தங்கள் அனைவரும் சிரிப்பொலியை எழுப்பினர்.  


மிகவும் கோலாகலமாக பிரமாண்டமாக மகளின் திருமணத்தை நடத்தி முடித்த ரோபோ சங்கருக்கு அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.