Ilayaraja Symphony: இசைஞானி இளையராஜாவின் முதல் சிம்பொனி அரங்கேற்றத்தை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

Continues below advertisement


இளையராஜாவின் சிம்பொனி:


இந்தியா குறிப்பாக தமிழ்நாடு என்பது திறமைகளுக்கு பஞ்சமில்லாத ஒரு மாநிலமாகும். உலகம் போற்றும் பல தலைவர்களையும், கலைஞர்களையும் இந்த மண் நமக்கு அளித்துள்ளது. அந்த வகையில் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத மாணிக்கமாக திகழ்பவர் தான் இசைஞானி இளையராஜா சுமார் 50 வருட இசைப்பயணத்தில், ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமத்துள்ளார். அவரது மெல்லிசை காலத்தினால் அழியாது என்பதோடு, பொதுமக்களுக்கு ஒரு அருமருந்தாகவும் உருவெடுத்துள்ளது. இந்நிலையில் தான், சிம்பொனியை இசையை அரங்கேற்றிய முதல் இந்தியர் என்ற சாதனையை, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் இசைஞானி இளையராஜா படைத்துள்ளார்.


ரசிகர்கள் உற்சாகம்:


“சிம்பொனி நம்பர் 1 வேலியன்ட்” என்ற தலைப்பில் இந்த வரலாற்று நிகழ்ச்சியை இளையாராஜா அரங்கேற்றியுள்ளார். பிரமாண்ட மேடையில் ஒளி வெள்ளத்திற்கு மத்தியில் நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் மூலம், தனது இசை வெள்ளத்தால் அங்கு திரண்டு இருந்த ரசிகர்களை கிறங்கடிக்க செய்தார் இளையராஜா. செல்லோ, வயலின், பியானோ, ட்ரம்பட் மற்றும் டிரம்ஸ் ஆகிய இசைக் கருவிகள், ராஜாவின் இசைப்படிகளுக்கு ஏற்ப இசைக்க ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்தது. உலகின் தலைசிறந்த இசைக்குழுவாக கருதப்படும் ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு வேலியன்ட் சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்றம் செய்தார்.


இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்களும், இளையராஜாவின் மகன்களுமான யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் உடனிருந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இசைஞானி இளையராஜா வெறும் 35 நாட்களில் 4க்கும் மேற்பட்ட மூமென்டுகள் கொண்ட சிம்பொனியை உருவாகியதாக கூறப்படுகிறது. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


வைரலாகும் வீடியோக்கள்: