கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் இந்தியப்படங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம். 


உலக அளவிலான ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது கேன்ஸ் திரைப்பட விழா. பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் இந்த விழாவில் தங்களது படைப்புகளும் இடம் பெற வேண்டும் என்பது இன்றும் படைப்பாளிகளின் கனவாக இருந்து வருகிறது. அந்த வகையில் 2022-ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா வருகிற மே 17-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தத்திரைப்பட விழாவில் எந்தெந்த இந்தியப்படங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை  பார்க்கலாம். 


ராக்கெட்ரி -  தி நம்பி எபெஃக்ட் - தமிழ் 


 



                                                         


இயக்குநர் - மாதவன் 


இந்தப்படம் வருகிற மே 19 ஆம் தேதி திரையிடப்பட இருக்கிறது. 


கோதாவரி -  மராத்தி 



                                                         


இயக்குநர் - நிகில் மகாஜன் 


ஆல்பா பீட்டா காமா- இந்தி 



                                                       


இயக்குநர் - ஷங்கர் ஸ்ரீகுமார் 


பூம்பா ரைட் -  மிஷன் 



                                                                         


இயக்குநர் -பிஸ்வஜித் போரா


Tree Full of Parrots  - மலையாளம் 



                                                                         


இயக்குநர் - ஜெயராஜ் 


துயின் - இந்தி, மராத்தி, 



                                                                                                                                 


இயக்குநர் - அச்சல் மிஸ்ரா


 






ராக்கெட்ரி திரைப்படம் பலாய்ஸ் கே அரங்கிலும் மற்ற திரைப்படங்கள் ஒலிம்பியா திரையரங்கிலும் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் பாலிவுட் நடிகர் அக்சய் குமார், பாலிவுட் நடிகர் நவாஸூதீன் சித்திக், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, வாணி திரிபாதி, கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர், திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி, நடிகர் மாதவன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.