இந்தியன் 2


ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. பல்வேறு சவால்கள் காரணமாக ஐந்தாண்டுகள் படப்பிடிப்பு இழுத்து பின் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியின் வெளியான இப்படம் நெகட்டிவான விமர்சனங்களை சந்தித்தது. முதல் பாகத்தை பார்த்து மெய் சிலிர்த்துப்போன ரசிகர்கள் இரண்டாம் பாகத்தை பார்த்து கடுப்பாகினார்கள். பின்னணி இசை , பாடல்கள் , வசனம் , கதை திரைக்கதை என படத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறை.  விமர்சனன் ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் இந்தியன் 2 திரைப்படம் பெரிய அடி வாங்கியது. 


இந்தியன் 3


மூன்றாவது பாகத்திற்கான லீட் கொடுத்து இரண்டாம் பாகத்தை முடித்தார் ஷங்கர். இதையே பார்க்க முடியல இதுல இன்னொரு பாகமா என ரசிகர்கள் சலித்துக் கொண்டார்கள். இன்னும் சிலர் இரண்டாவது பாகத்தில் விட்டதை ஷங்கர் மூன்றாவது பாகத்தில் பிடிப்பார் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறார்கள். நடிகர் கமல்ஹாசனும் தனக்கு இந்தியன் 2 விட இந்தியன் 3 தான் ரொம்ப பிடிக்கும் என்றும் தெரிவித்திருந்தது ஒரு நம்பிக்கையாக இருக்கிறது. 


ஓடிடியா ? தியேட்டரா ?


இந்தியன் 2 படத்தின் தோல்வியைத் தொடர்ந்து இந்தியன் 3 படம் திரையரங்கில் வெளியாகாது என்றும் படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை மறுத்து தற்போது சங்கர் பேசியுள்ளார் " இந்தியன் 2 படத்திற்கு இவ்வளவு நெகட்டிவ் விமர்சனங்கள் வரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அந்த தவறை மூன்றாவது பாகம் மற்றும் கேம் சேஞ்சர் படத்தில் தான் சரி செய்துகொள்ளப் போவதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியன் 3 திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் வெளியாகும் என அவர் உறுதியளித்துள்ளார். "