Just In





Kamalhaasan: எந்திரன் படத்தில் ஏன் நடிக்கவில்லை? உலகநாயகன் கமல் சொன்ன காரணம்!
ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தில் ஏன் நடிக்கவில்லை? என்று உலகநாயகன் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்

இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 (Indian 2) படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் பிஸியாக உள்ளார்கள். முன்னதாக கல்கி படத்திற்கான ப்ரோமோஷன்களில் கலந்துகொண்ட கமல்ஹாசன் தொடர்ச்சியாக இந்தியன் 2 படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்.
சென்னை, மும்பையைத் தொடர்ந்து தற்போது மலேசியாவில் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார்கள் படக்குழுவினர். இந்த நிகழ்வில் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இந்தியன் 2 மற்றும் தங்கள் பிற படங்களைப் பற்றிய நிறைய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்தியன், சிவாஜி முதல்வன் படத்தை இணைக்க நினைத்த ஷங்கர்
ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ஷங்கர் “ எந்திரன் படத்தின் படப்பிடிப்பின் போது எனக்கு ஒரு ஐடியா வந்தது. இந்தியன் , சிவாஜி மற்றும் முதல்வன் ஆகிய மூன்று படங்களின் கதைகளையும் ஒன்றாக இணைத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு யோசனைத் தோன்றியது. நான் உடனே என்னுடைய் உதவி இயக்குநர்களுக்கு ஃபோன் செய்து சொன்னேன். ஆனால் அவர்கள் நான் எதிர்பார்த்த ரெஸ்பான்ஸை தரவில்லை. உதவி இயக்குநர்கள் பெரிதாக ஊக்குவிக்காததால் நானும் இது சரியான ஐடியா இல்லை என்று நம்பி இதை கைவிட்டுவிட்டேன். “ என்று கூறினார்.
எந்திரன் படத்தில் நடிக்காதது ஏன் ?
அதே போல் ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தில் முதலில் கமலே நடிக்கவிருந்தார். இந்தப் படத்தின் கதையை 1999 ஆம் ஆண்டிலேயே ஷங்கர் கமலிடம் சொல்லியிருந்தார். ஆனால் கமல் இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். எந்திரன் படத்தில் ஏன் நடிக்கவில்லை என்று கமல் தற்போது விளக்கமளித்துள்ளார். ” என்னுடைய கால்ஷீட் , என்னுடைய மார்கெட் இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நான் எந்திரன் படத்தில் நடிக்கவில்லை. இந்தப் படம் அப்படியே கைவிடப் படும் என்றுதான் நான் நினைத்தேன்.ஆனால் என் நண்பர் ரஜினிகாந்த் சரியான நேரத்தில் இந்தப் படத்தை கையில் எடுத்தார்” என்று கமல் தெரிவித்துள்ளார்.