இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
உலகக்கோப்பையை வென்ற இந்தியா:
இந்நிலையில் ஜூன் 29 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்த வென்றதை அடுத்து அவர்களுக்கு ஜூலை 4ம் தேதியான நேற்று பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.
ஜூலை 4ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி ரசிகர்களுடன் இணைந்து 'வந்தே மாதரம்' பாடலைப் பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கிட்டத்தட்ட 30,000க்கும் மேற்பட்ட மக்கள் அந்த இடத்தில் கூடி இருந்தனர்.
அந்த சமயத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஒரே குரலில் 'வந்தே மாதரம் ' பாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டிங்கானது. ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து 'மா துஜே சலாம்' வீடியோவில் பணிபுரிந்த இயக்குநர் பாரத் பாலா, இந்திய அணியின் இந்த வெற்றியின் கிளிப் ஒன்றை பகிர்ந்து தன்னுடைய அளவில்லா ஆசையை உணர்ச்சியை பகிர்ந்து இருந்தார்.
27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்த தேசிய கீதம் இன்று கேட்கும் போதும் மனது உணர்ச்சிவசப்படுகிறது. இந்த வீடியோவை பார்க்கையில் ஒரு வித்தியாசமான அதிர்வலைகளை ஏற்படுகின்றன. கோஹ்லி மற்றும் பாண்ட்யா செல்ல அவர்கள் பின்னால் ஒட்டு மொத்த டீமும் பின்தொடர்ந்து செல்கிறது. அவர்களுக்கு பரிசு தொகையாக 125 கோடியை வழங்கப்பட்டுள்ளது.