இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் தமிழ்நாட்டின் இசை சொத்து என்பது நாம் அனைவரும் அறிந்தது. அனைவரும் இளையராஜாவின் இசை பட்டறையில் இருந்து வந்தவர்கள் என்பது ஒருபுறம் இருக்க, இருவரும் ஒன்றாக தோன்றுவது என்றாவது நடக்கும். அதுவும் சமீப காலத்தில் தான் அவை அடிக்கடி நிகழ்கின்றன.


அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் இசைப்புயலும், இசைஞானியும் சங்கமித்திருக்கிறார்கள். அதுவும் ஒரே பேருந்தில், ஒரே இருக்கையில், ஒருவர் மீது ஒருவர் உரசிக் கொண்டு, அன்பை பகிர்ந்து கொண்டு. பார்க்கவே பல்லவி கேட்பது போல இருக்கும் அந்த காட்சி, தற்போது ஏ.ஆர்.ரஹ்மானின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு, இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. 


இசைப்புயலும், இசைஞானியும் இணைவதை பார்த்தலே பரவசம் தான். அதுவும் இருவரும் சிரித்த முகத்தோடு, வெளிநாடு பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய போது நடந்த இந்த சந்தித்து, அவர்களை மட்டுமின்றி, அந்த சந்திப்பை பார்க்கும் பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், 


‛நாம் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்பி வருகிறோம் .. ஆனால் இலக்கு எப்போதும் தமிழ்நாடு’ 






என்று பெருமையோடு பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். சமீபத்தில் கனடாவில் நடந்த விழாவில் அங்குள்ள மாகானத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான், அதன் பின் இந்தியா திரும்பியுள்ளார். அதே போல ஹங்கேரி சென்ற இசைஞானி இளையராஜா அங்கு தனது அறைக்கு எதிரே உள்ள காட்சிகளை கண்டு வியந்து, போட்டோக்களை பகிர்ந்து கொண்டார்.