பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (100) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் அகமதாபாத்தில் உள்ள ஐ.நா மேத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரதமரின் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


 



 


குஜராத் காந்திநகரில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடலுக்கு காந்தி நகரில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. தாயாரின் பூத உடலை தோளில் சுமந்து சென்றதுடன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு மயானத்தில் அவரின் உடலுக்கு தீ மூட்டினார்.


பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், கட்சி தொடர்கள், திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து இசைஞானி இளையராஜா சமூக வலைத்தளத்தில் அறிக்கையின் மூலம் இரங்கலை தெரிவித்துள்ளார். 






 


இளையராஜாவின் இரங்கல் :



இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ' நமது பாரத பிரதமர் மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் தாயார் மறைவுற்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும், அடைந்தேன். பிரதமரின் தாயாக இருந்தாலும் தன் மகனிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காத தாய். எனது தாயாரும் அவ்வாறே என்னிடம் எதையும் கேட்டதில்லை... இப்படிப்பட்ட அன்னையார்களை உலகில் வேறு எங்கும் காண முடியுமா? அவர் மறைந்தது துயரம். நமது பிரதமர் அவர்கள் துயரத்தில் நான் பங்கு கொள்கிறேன், அன்னை ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்திக்கிறேன்' என தெரிவித்துள்ளார். 






 


ரஜினிகாந்த்தின் இரங்கல் : 


ரஜினிகாந்த் தன்னுடைய இரங்களில் மரியாதைக்குரிய மோடி அவர்களின் தாயாரின் மறைவிற்கு என்னுடைய இதய பூர்வமான  இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.