அஜித் படக்குவுக்கு இளையராஜா நோட்டீஸ்


ஆதிக் ரசிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த படத்தில்  இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்னும் சொல்லப் போனால் படத்தின் வெற்றிக்கே இந்த பாடல்கள் மிகப்பெரிய காரணமாக அமைந்துள்ளது. தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு அல்லது படத்தில் இருந்து பாடல்களை நீக்க வேண்டும் என இந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. ஆனால் பாடல்களுக்கான உரிமையை சம்பந்தப்பட்ட ஸ்டுடியோவிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

Continues below advertisement


எங்களிடம் நிறைய பணம் இருக்கிறது



நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கை அமரன் ' காப்பிரைட்ஸ் விவகாரத்தில் இந்திய விதிகளை நாங்கள் பின்பற்றவில்லை. உலகளவில் என்ன விதி இருக்கிறதோ அதை நாங்கள் பின்பற்றுகிறோம். ஒரு படத்தின் கதையில் அந்த படத்தின் இயக்குநருக்கு உரிமை இருக்கிறது. அந்த படம் எத்தனை மொழிகளில் வெளியானாலும் அதில் அவருக்கு உரிமை இருக்கிறது. அந்த படத்தின் பாடல்களில் அவருக்கு உரிமை கிடையாது. நாங்கள் ஒப்பந்தம் செய்திருந்த நிறுவனம் படத்தின் பூஜையின் போது பாடல்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள். ஆனாள் அன்னக்கிளி படத்தின் பாடல்கள் பெரிய விலைக்கு போயுள்ளதை பின்புதான் தெரிந்து கொண்டோம். அதன் பின்னர் தான் இளையராஜா தனது பாடல்களுக்கன உரிமை தன்னிடம் இருக்க வேண்டும் படத்தின் பாடல்களுக்கு வேண்டுமானால் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொனனர். இந்த சூழலில் தான் தனது பாடல்களை மேடையில் பாடக் கூடாது என எஸ்.பி பாலசுப்ரமணியுடன் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டது. என்னுடைய தலையீட்டிற்கு பின்புதான் இளையராஜா மேடையில் தனது பாடல்களை பாட அனுமதித்தார். 7 கோடி சம்பளம் வாங்கிய இசையமைப்பாளரின் பாடல்கள் ஹிட் ஆகவில்லை எங்களுடைய பாடல்களைதான் ரசிகர்கள் கொண்டாருகிறார். அப்படியென்றால் அதில் எங்களுலக்கும் பங்கு இருக்கிறது தானே. பாட்டை பயன்படுத்துகிறோம் என்று நேரடியாக கேட்டிருந்தால் இலவசமாகவே கொடுத்திருப்போம் .


அது அஜித் படமாக இருந்தால் என்ன. எங்கள் பாட்டை நீ எப்படி திருடலாம். எங்களுக்கு பணத்தாசை கிடையாது எங்களிடம் நிறைய பணம் இருக்கிறது. " என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.