கொம்புசீவி படத்தில் இணைந்து பாடிய இளையராஜா யுவன் சங்கர் ராஜா

ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் 'கொம்புசீவி' திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர்.

Continues below advertisement

கவிஞர் பா விஜய் வரிகளில் உருவான "அம்மா என் தங்ககனி,நீதானே எல்லாம் இனி, தாலாட்டும் பாட்டு இங்கே யார் சொல்வார்" என்ற உணர்வுபூர்வமான பாடலை இசைஞானி இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து மிகவும் சிறப்பாக பாடியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்பாடல் 'கொம்புசீவி' படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும்.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள 'கொம்புசீவி' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

Continues below advertisement

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்திற்காக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் பொன்ராம் முதல் முறையாக கை கோர்த்துள்ளார். 

கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த, நகைச்சுவையும் சண்டை காட்சிகளும் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் திருவிழாவாக உருவாகியுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் புதிய நிறுவனமான ஸ்டார் சினிமாஸ் பேனரில் முகேஷ் டி. செல்லையா தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கப்பட்டது சென்னையில் நிறைவுற்றது. 

புதுமுகம் தார்னிகா நாயகியாக நடிக்கிறார். சுஜித் ஷங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட்,  ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் படத்தொகுப்பை கையாள, கலை இயக்கத்தை சரவண அபிராம் கவனிக்க, ஃபீனிக்ஸ் பிரபு மற்றும் சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ஸ்டில்ஸ்: சி.எச். பாலு; நடன இயக்கம்: ஷெரிப், அசார். நிர்வாக தயாரிப்பு: ஜெயசங்கர், செல்வராஜ்.

தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி சுற்றி இருக்கும் கிராமங்களையும், அங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கையையும் இப்படம் பேசுகிறது. இயக்குநர் பொன்ராமுக்கே உரிய நகைச்சுவையும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் நிரம்பி இருக்கும். 

ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.