உதயநிதி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில், சீட்டுகள் குலுக்கி அதில் வரும் பெயர்களை படித்து அந்த நபர்களுக்கு உதயநிதி என்ன சொல்ல விரும்புகிறார் என்று கேட்கப்பட்டன. அதில் உலகநாயகன் கமல்ஹாசன் குறித்து,"எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கமல் சார் ஃபேன் தான், ரஜினி சார் படத்துக்கு எப்படி விரும்பி முதல் நாள் முதல் ஷோ பார்க்க போவேனோ அதை விஜித அதிகமா கமல் சாரோட திரைப்படங்களை விரும்பி பார்ப்பேன். நல்ல ஆரோக்கியத்துடன் இன்னும் நிறைய படங்கள் செய்ய வேண்டும் என்று கேட்பேன்." என்றார். பின்பு அவர் எடுத்த சீட்டில் விஷால் என்று எழுதியிருந்ததை பார்த்து மகிழ்ச்சியடைந்த அவர், "என்ன வேணும்ன்னாலும் சொல்லலாம், பள்ளி காலங்களில் இருந்து ஒண்ணா படித்து, ஒண்ணா கட் அடிச்சு, ஒண்ணா பிட் அடிச்சு, ஒண்ணா சைட் அடிச்சு வளர்ந்தவங்க நாங்க… நிறைய வேலைகளை தலையில் தூக்கி வைத்துக் கொள்கிறார், அதிலிருந்து கொஞ்சம் அமைதியாக மாற வேண்டும், ஆனால் அது அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன், இன்னும் நிறைய வேலைகள், இன்னும் நிறைய பொறுப்புகள், தன்னை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற வேட்கை இருக்கிறது" என்றார்.


பின்னர் அவர் எடுத்த சீட்டில் சந்தானம் பெயர் இருந்தது, "இந்த வருடம் அவருக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் என்று நம்புகிறேன், சிரிச்சுகிட்டே ஓட்டிடுவாரு, ஒரு ஐந்து நிமிடம் கழித்து தான் நமக்கு புரியும் நம்மை ஒட்டி இருக்கிறார் என்று. யாரு என்னன்னு எல்லாம் பாக்க மாட்டாரு, எல்லாரையும் ஓட்டுவாரு, இப்பவும் நான் போன் பண்ணி என்ன கேட்டாலும் எனக்காக செய்வார், அவர் கேட்டாலும் நான் அவருக்காக செய்வேன். முதல் மூன்று படங்களில் ஏற்பட்ட நட்பு இன்னமும் இருக்கு, ஒன்றாக நடிக்கவில்லை என்றாலும் இன்னும் தொடருது". என்றார். சீட்டில் சீமான் என்ற பெயர் வந்ததும் சிரித்துவிட்டு, "ரொம்ப எமோஷனலாக பேசுகிறார், சில நேரங்களில் ரொம்ப அவதூறாகவும் பேசி விடுகிறார், ஆனால் அவர்மீது எங்களுக்கு நிறைய மரியாதை இருக்கிறது, அவருக்குதான் என் மீது மரியாதை இல்லை என்று நினைக்கிறேன், எங்கு எப்போது பார்த்தாலும் எப்படி இருக்கீங்க என்று நான் போய் பேசி விடுவேன், என்னிடம் நன்றாக பேசுவார், ஆனால் மேடையில் மைக்கை பிடிக்கும்போது எமோஷனல் ஆகி கண்ணாபின்னா என்று பேசிவிடுகிறார்." என்று கூறினார். நேற்று மேடையில் திமுகவினரை பார்த்து செருப்பை தூக்கி காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 






அரசியலை ப்ரொஃபக்ஷனாக கொண்டவர்கள் சினிமாவில் அரசியல் கருத்துகள் கொண்ட திரைப்படங்கள் நடிப்பார்கள், நீங்களும் எதிர்காலத்தில் அப்படி நடிக்க வைப்பிருக்கிறதா என்று கேட்ட கேள்விக்கு, "நீங்க, மாத்தி சொல்லிடீங்க, எனக்கு அரசியல்தான் பேஷன், சினிமா தான் ப்ரொஃபக்ஷன், என்னுடைய படங்களில் அட்வைஸ் இருக்ககூடாதுன்னு நினைப்பேன், எல்லோருக்குமான படமாக அது இருக்க வேண்டும். மனிதனுக்கு பிறகு சமூக சிந்தனை உடைய படங்களில் நடிக்க வேண்டும் என்று தோன்றியது. கண்ணே கலைமானே திரைப்படத்தில் ஒரு சில வசனங்கள் பேசியிருப்பேன். சீனு ராமசாமி ஒரு கம்யூனிச சித்தாந்த பிடிப்பு உடையவர் என்பதால், நீட் குறித்து பேசியிருப்போம், கொஞ்சம் அரசியல் பேசியிருப்போம். ஆனால் நம் சித்தாந்தங்களை படங்களில் திணிக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்." என்றார்.


ஆர்பத்தில் காமெடி திரைப்படங்கள் நிறைய நடித்தீர்கள், இப்போது சீரியஸான திரைப்படங்கள் நடிக்கிறீர்கள், இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு, "மனிதனுக்கு முன், மனிதனுக்கு பின் என்று என் கரியரை பிரித்துக்கொள்ளலாம், ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மிகப்பெரிய ஹிட் இதே ஃபார்முலாவில் படம் செய்துவிட்டு போகலாம் என்று தோன்ற வைத்தது, ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கே போர் அடித்தது, பின்னர் மனிதன் எனக்குள் ஒரு தன்னம்பிக்கையை கொடுத்தது, சவாலான மதாபாத்திரங்களை செய்யலாம் என்று. புதிதாக ஏதாவது ஒன்று இருக்க வேண்டும் படத்தில் என்று நினைக்கிறேன். அடுத்ததாக மகிழ்திருமேனி சார் படத்தில் நடிக்கிறேன். அதுவும் அது போன்று புதிதாக ஒன்றை பேசும் படம் தான்." என்றார்.



இளையராஜா குறித்து பேசுகையில், "நிசுயமாக சினிமாவில் இருக்கும் எல்லோருக்கும் ராஜா சார் மியூசிக்ல நம்ம ஒரு படம் நடிச்சிட மாட்டோமா என்று நினைப்போம், நாணும் ஒரு பெரிய ஃபேன், பயணங்களின் போதெல்லாம் ராஜா பாடல் தான் கேட்பேன், இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு மிஷ்கின் சாருக்கு தான் நன்றி சொல்வேன், அடுத்ததா அந்த பாடல்கள், 'தாய் மடியில்', 'உண்ண நெனச்சு' என பாடல்கள் ஹிட் ஆனதும் ரொம்ப பெரிய விஷயம் எனக்கு. அந்த பாடலை முன்பு கம்போசிங்கில் இடுக்கும்போதே மிஷ்கின் சார் எனக்கு வாட்ஸாப்பில் அனுப்பினார், அப்போதே சொல்லிவிட்டேன் இது வெளியாகும் வருடத்தின் டாப் 10 பாடல்களில் ஒன்றாக இருக்கும் என்று. அப்போது என்னிடம் மிஷ்கின் சார் சொன்னார், இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது போயி கிட்டார் கற்றுக்கொள் என்றார், நாணும் 2 நாள் க்ளாஸ் போனேன், ஆனா முடியல, கத்துக்கிட்டேன் சார் ன்னு பொய் சொல்லிட்டேன். ஷூட்டிங்ல வந்து ஷாக் ஆகிட்டார், சார் பொய் சொல்லிட்டேன் சார், ரெண்டு நாள்ல எப்படி சார் கத்துக்க முடியும் என்று கேட்டதும், அங்கு இருந்த இசை கலைஞர்கள் எல்லாரும் உதவினார்கள், எந்த நோட்ஸ்க்கு கையை எப்படி வைக்கணும் என்று". 


உதயநிதி தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் திரைப்படமான 'நெஞ்சுக்கு நீதி' என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் இந்தியில் வெளியாகி பெரும் சர்ச்சைகளை கிளப்பிய ஆர்டிகல் 15 என்னும் படத்தின் ரீமேக் ஆகும். இதற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். அதற்கு பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஆகியோர் இணைந்து நடிப்பதாக தெரிகிறது.