கோலிவுட்டில் ரிக்ஷா மாமா என்னும் வெற்றிப்படத்தை கொடுத்தவர் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் செயின். அந்த திரைப்படத்தில் சத்தியராஜ் ஹீரோவாக நடிக்க விஜயக்குமார் மகள் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அந்த படம் 1992 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்தை எடுத்திருந்தார். அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது. இந்த நிலையில் படத்தில் நாயகனாக நடித்த நடிகர் விஜயை பாராட்டி தள்ளியிருக்கிறார் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின்.
பேட்டி ஒன்றில் பேசிய அவர் "தலைவா படத்துல விஜயின் ஒத்துழைப்பு மிக சிறப்பாக இருந்தது. அவரை போல ஒரு ஹீரோவை நான் பார்த்ததே இல்லை.சத்தியமாக என் வாழ்க்கையில இப்படியான நடிகரை பார்த்ததே இல்லை. ஒரு மனிதன் இப்படி இருப்பாங்களா என ஆச்சர்யப்பட வைத்தவர்தான் விஜய். தலைவா ஷூட்டிங்கில் அவர் நடந்துக்கிட்ட விதம் அருமை. மும்பையில் ஷூட்டிங் நடந்த சமயத்தில், ஞாயிற்றுக்கிழமை ஷூட்டிங் நடக்கும் . 6 மணிக்குதானே ஷூட்டிங் ஒரு 5 மணிக்கு போகலாம்னு ரூம்ல இருப்பேன். 4.30 மணிக்கு என் மகனுக்கு அழைப்பு வரும். விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டாருனு. விஜய் வந்த பிறகு எப்படி நாம தூங்க முடியும். நான் என்ன இவர் இவ்வளவு சீக்கிரமாக ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வற்றார்னு எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். அவர் அமைதியா கேரோவேன்ல உக்காந்திருப்பாரு. விஜய்யால அந்த படத்துல ஒரு நாள் கூட லேட் ஆனது கிடையாது சார். ஷூட்டிங் முடிந்து அவருக்கு ரொம்ப நன்றி சொன்னேன். அவர் ஏன் நன்றி சொல்லுறீங்கன்னு கேட்டாரு. நான் இந்த மாதிரி ரொம்ப நல்லா நடிச்சு கொடுத்தீங்கன்னு சொன்னதும் , அது என் கடமை சார். என்னோட வேலையத்தானே நான் செய்தேன் என்றார். விஜய்க்கு நான் அடிமை சார். தம்பி போல அவர் மீது அன்பு வைத்திருக்கிறேன் “ என தெரிவித்துள்ளார்..