தமிழ்நாட்டுல படம் பண்ணவே எனக்குப் பிடிக்கல என்று பேசியுள்ளார் இயக்குநரும், சமீப காலத்தில் நடிகராகவும் அறியப்படும் செல்வராகவன். 


தமிழ் சினிமா உலகில் மிகவும் தனித்துவமான இயக்குனராக திகழ்கிறார் இயக்குனர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் என பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர். இயக்குனர் செல்வராகவன், கடைசியாக நடிகர் சூர்யாவை வைத்து இயக்கிய என்.ஜி.கே சரியாக போகவில்லை. செல்வராகவன் அவருடைய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி ஆகிய படங்களில் நடித்த சோனியா அகர்வாலும் காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்துவேறுபாடு காரணமாக 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதையடுத்து, கீதாஞ்சலியை 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இயக்குனர் செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 


துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 12  ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளனர். படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வரும் நிலையில் செல்வராகவனின் இந்தப் பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.


ஒரு இணையதளத்திற்கு அவர் அளித்தப் பேட்டியில், வடக்கில் கூட மாற்று சினிமா எடுக்கிறார்கள். அங்கே பக்கவாட்டு சிந்தனையுடன் பேரலல் சினிமா எடுக்கிறார்கள். ஆனால் தெற்கில் மட்டும் எதுவுமே மாறல. நானும் 13 வருஷமா பார்க்கிறேன். அப்புறம் என்னத்துக்கு இங்கே படம் பண்ணனும்னு தோணுது. எனக்கு உண்மையிலேயே தமிழ்நாட்டுல படம் பண்ணவே பிடிக்கல. 


உண்மையிலே இங்கேயே திறமையான கலைஞர்களுக்குப் பஞ்சமில்லை. சூர்யா சாருக்குள்ள இருக்கும் நடிகனை முழுசா வெளிய கொண்டு வரணும். கமல் சார் நினைச்சா இந்த தேசத்தையே கட்டிப்போட முடியும். அது மாதிரி சினிமா செய்யணும். இவங்க மட்டுமல்ல அஜித், விஜய், விக்ரம், தனுஷ் என்று ஒவ்வொருவருடைய் ஃபுல் கெப்பாசிட்டிக்கு ஏத்த மாதிரி கதை பண்ணா அவுங்களோடு திறமைக்கு சவாலே இருக்காது.






ஆனா இங்க இப்போ எப்படி இருக்கு தெரியுமா? பருத்தீவிரன் மாதிரி ஒரு ரஸ்டிக் படமோ அல்லது ஒரு நாகரீக கோளாறு பத்தி பேசுற படமோ அல்லது அநியாயங்களைப் பற்றி பேசுற படமோ எது பண்ணாலும் பிரச்சனையாயிடும். இங்க எல்லோருக்கும் மைண்ட்லெஸ்ஸா சிரிக்க ஒரு படம் வேணும். இல்ல 10 பேரு கத்த ஒரு படம் வேணும். இங்க கதைக்கே வேலை இல்லை. அப்புறம் என்ன படம் பண்றது பத்தி பேசுறது. இவ்வாறு செல்வராகவன் அந்தப் பேட்டியில் பேசியிருக்கிறார்.