படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், பத்திரிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டுள்ளது. படம் பார்த்த விமர்சகர்கள் விக்ரம் வேதா சூப்பராக உள்ளது என்று பாசிட்டிவான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். கடந்த  2017-ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் 'விக்ரம் வேதா’.  இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்த இப்படம் இந்தியில் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலி கான் நடிப்பில் அதே பெயரில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவாகியிருக்கிறது.  












மாதவனின் க்ளாஸான லுக்காலும், விஜய் சேதுபதியின் மாஸான நடிப்பாலும், இன்று வரை இப்படமானது பேசும் பொருளாக உள்ளது. எப்போதுமே ஒரு மொழி படத்தை ரீமேக் செய்யும் போது எதிர்ப்பார்ப்புகள் இருக்கும். அதுவும் நல்ல வரவேற்பு பெற்ற படத்தை ரீமேக் செய்தால் கூடுதல் எதிர்ப்பார்ப்புகள் இருக்கும். அதுபோல்தான் விக்ரம் வேதாவும். மாதவன் - விஜய் சேதுபதி காம்போ போல் ஹ்ரித்திக் ரோஷன் - சைஃப் அலி கான் காம்போ நன்றாக அமையுமா?.. ரீமேக் என்ற பெயரில் ஒர்ஜினல் படத்தின் பெயருக்கு பங்கம் விளைவித்து விடுவார்களா என்று பல கேள்விகள் எழும்பியது.



இந்த சமயத்தில், இப்படமானது நன்றாக உள்ளது என்றும் வீழ்ந்து கொண்டு போகும் பாலிவுட்டை தூக்கி நிறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்றும் ட்விட்டர் வாசிகள், அவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆர் ஆர் ஆர், புஷ்பா போல் இப்படமும் வசூல் சாதனை புரியும் என்றும் சொல்லப்படுகிறது. பலரும் 3-4 ஸ்டார் ரேட்டிங்கை கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது