இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் 2017ம் ஆண்டு தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற "விக்ரம் வேதா" திரைப்படம். வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்த இப்படத்தினை ஹிந்தியில் அதே பெயரில் அதே இயக்குனர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலி கான் நடிக்கும் ஹிந்தி "விக்ரம் வேதா" திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் பட குழுவினர் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களுடன் சந்திப்பு நடைபெற்றது. 


 



 


பொன்னியின் செல்வன் படத்தோடு போட்டி பற்றி கேள்வி :


இந்த பிரஸ் மீட்டில் விக்ரம் வேதா படக்குழுவினரிடம் பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் மோதுவது குறித்த உங்களின் கருத்து என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு ஹிருத்திக் ரோஷன் கூறிய பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதலில் இந்த கேள்விக்கு பதில் அளித்த படத்தின் இயக்குனர் புஷ்கர், "பொன்னியின் செல்வன்" திரைப்படம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க உன்னதமான கதை. அதனோடு போட்டியிட்டு எங்களால் எப்படி ஜெயிக்க முடியும் என்ற பதிலளித்தார். இரண்டு படங்களையும் நான் பெரிய திரையில் பார்க்க போகிறேன் என்றார். மேலும் இயக்குனர் மணிரத்னத்தின் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு எனக்கும் உள்ளது என பதிலளித்தார். 






அதிர்ச்சியளித்த ஹிருத்திக் ரோஷனின் பதில்:


பொன்னியின் செல்வன் திரைப்படத்தை "விக்ரம் வேதா" வெல்ல முடியாது என்று இயக்குனர் புஷ்கர் சொன்ன பதிலை கேட்டு அதிர்ச்சியடைந்தார் ஹிருத்திக். இது குறித்து அவர் கூறுகையில், இது வரையில் நான் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்ததில்லை. அதனால் என்னை பொறுத்தவரை எங்கள் விக்ரம் வேதாதான் என பதில் அளித்தார். இது அவரின் படத்திற்கு மிகவும் ஸ்ட்ராங்காக அவர் செய்துள்ள விளம்பரம் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். ஹிருத்திக் ரோஷனின் இந்த பதில் விவாதத்திற்கு உட்பட்டாலும் அவன் இந்த பதிலுக்கு பலரும் அவர்களின் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.    






பாக்ஸ் ஆபிஸை அள்ளப்போகும் PS1 :


அமரர் கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் ஒரு பிரமாண்டமான ஓப்பனிங்கை பெறுவதற்காக உலகம் முழுவதிலும் உள்ள 2000 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இது ஒரு சரித்திர காவிய திரைப்படம் என்பதால் நிச்சயமாக இதற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.