‘ஓ சொல்றியா’ பாடல் குறித்து தேவி  ஸ்ரீ பிரசாத் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் , “நான், அல்லு அர்ஜூன், சுகுமார் எங்களது மூவரின் கூட்டணியில் முன்னதாக வந்த   ‘ஆ அண்டே அமலாபுரம்’,   ‘ரிங்க ரிங்கா’ போன்ற அயிட்டம் பாடல்கள் மிகப் பெரிய ஹிட்டடித்தன. அதனால் அடுத்ததாக எங்களிடம் வந்த இந்த பாடலுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 


இந்தப்பாடலை பொருத்தவரை டைரக்டரிடம்  ‘இதல்லாம் ஒரு அயிட்டம் சாங்கா’ என்பதுபோல ஒரு அயிட்டம் சாங்கை போட்டுத் தருகிறேன். ஆனால் என்னை நம்பி அந்த அயிட்டம் சாங்கை நீங்கள் ரிலீஸ் செய்தால் இந்தப் பாட்டு மிகப்பெரிய வெற்றி பெறும் என்று சொன்னேன். அதன் பின்னர்தான் ஓ சொல்றியா பாடலின் டியூனை அனுப்பினேன்.




டியூனை கேட்ட உடன், டைரக்டருக்கு ட்யூன் மிகவும் பிடித்துவிட்டது. அல்லு அர்ஜூனும் கால் செய்து இந்த முதலில் என்னமோ என்று நினைத்தேன். ஆனால் ட்யூன் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது என்றார். அதனைத் தொடர்ந்து பாடலை ரிலீஸ் செய்தோம்.  பாடல் வெளியான 1/2 மணி நேரம் இதல்லாம் ஒரு அயிட்டம் சாங்கா என்பது போலதான் கமெண்ட்ஸ் வந்தது. ஆனால் அதன் பின்னர் பாடலுக்கு கிடைத்த வரவேற்பு வேறு மாதிரியாக இருந்தது.” என்றார் 




ஆனால் வாயாய்யா சாமி பாடல் பொருத்தவரை பாடல் உருவாகும் போதே, இந்தப் பாடலுக்கு தியேட்டரை கிழிஞ்சாலும் கவலைப்பாடாதீர்கள் என்று தயாரிப்பாளரிடம் போன் செய்து சொன்னேன். நான் சொன்ன மாதிரியே அந்தப் பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது” என்று பேசியுள்ளார்.


முன்னதாக, புஷ்பா படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா ஆடிய  ‘ஓ சொல்றியா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டது. வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலான இந்தப் பாடலை தற்போது வரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தனர். அதனைத்தொடர்ந்து அந்தப் பாடல் தொடர்பான ப்ரோமோவும் வெளியிடப்பட்டது.


அதனைத்தொடர்ந்து இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று கூறி ஆந்திராவில் உள்ள ஆண்கள் அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்தது. அவர்கள் அளித்த புகாரில், இந்தப் பாடல் வரிகள் ஆண்களை வக்கிர மனம் கொண்டவர்களாக சித்தரிப்பதாகவும், அவர்கள் செக்ஸை மட்டும் பற்றியே சிந்திப்பதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். தொடர்ந்து படமும் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சமந்தா ஆடிய இந்தப் பாடலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.