நடிகர் ரோபோ ஷங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். மனைவி பிரியங்கா குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு? போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பரிச்சையமானவர்.
தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிகில் படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மைப்படுத்தி வெளியானது. அட்லீ இயக்கியிருந்த இப்படத்தின் நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் பெண்கள் கால்பந்து குழுவில் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகன் இந்திரஜா பாண்டியம்மா ரோலில் நடித்திருந்தார்.
பிகில் படத்தின் ஒரு காட்சியில் பெண்கள் அணியினர் சரியாக விளையாடததால் அவர்களை விஜய் திட்டுவது போல் காட்சி இடம்பெற்றிருந்தது. அதில் பாண்டியம்மா இந்திரஜாவை விஜய் குண்டம்மா…. குண்டம்மா என திட்டுவார் இதனாலே படத்தில் நடித்த மற்ற பெண்களை விட இந்திரஜா பெரிய அளவில் பிரபலமானார்.இதையடுத்து அவரது அப்பா ரோபோ சங்கர் போலவே இந்திராஜாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் கூடியது. கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிக்க வைத்து வருகிறார். அந்தவகையில் தற்போது மேக்கப் போட்டு ஆள் அடையாளமே தெரியாத வகையில் டோட்டலாக சேஞ் ஆகியுள்ளார்.
உடல் எடை குறைத்தது குறித்து அவர் கூறுகையில்,"ஒரே ஜானரில் இயங்க விருப்பமில்லாமல் தான் தோற்றத்தை மாற்ற முடிவு செய்தேன், கடந்த வருடம் கடைசி 100 நாட்கள் ஒரு சேலஞ் எடுத்துக்கொண்டேன், பல பழைய நம்பிக்கைகளை உடைக்கத்தான் 100 நாட்களில் உடல் எடை குறைக்கும் முடிவுக்கு வந்தேன். அதன்படி 15 முதல் 20 கிலோ வரை எடை குறைத்தேன். கடுமையான் உடற்பயிற்சி செய்தேன். ரெகுலர் டயட் கடைபிடித்தேன். என் டயட்டை முதலில் 3 வேளை உணவிலிருந்து ஆறு வேலை உணவுக்கு பிரித்துக்கொண்டேன். காலை எழுந்ததும் ஐந்தாறு பாதாம் மற்றும் க்ரீன் டீ குடித்துவிட்டு உடற்பயிற்சி செய்ய செல்வேன். அது முடிந்ததும், நான்கு முட்டையின் வெள்ளை கரு மட்டும் சாப்பிடுவேன். காலை உணவு ஓட்ஸ், அல்லது மூன்று இட்லி அல்லது இரண்டு தோசை. பதினோரு மணிக்கு ஆப்பிள் அல்லது கொய்யா ஜூஸ், பின்னர் மதியம் சத்தான காய்கறிகள், சிக்கன், மீன் எல்லாம் சாப்பிடுவேன். மட்டன் மட்டும் தவிர்க்கலாம். மாலை நாட்டு சர்க்கரை போட்ட காபி, அதுதான் மேரி கோல்ட் பிஸ்கட் ரெண்டு. இரவு எட்டு மணிக்கு முன் சாப்பிட வேண்டும், அப்படி இரவு கண் முழிப்பதாயிருந்தால், பசிக்கும்போது சூடான தண்ணீர். அவ்வளவுதான் என் டயட்" என்றார்.
உடல் எடை குறைந்து மட்டுமின்றி, பொழிவும் பெற்றது எப்படி என்று கேட்டபோது,"முகத்தை கழுவிட்டு ஜாலியாக 8 மணிநேரம் தூங்குங்கள், ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்க, தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம், கண்ணில் வெள்ளரி பிஞ்சு வெட்டி வைக்கலாம், ஸ்பெஷலாக எதுவும் செய்ய வேண்டியதில்லை" என்றார். கூந்தலுக்கான பராமரிப்பாக இயற்கை முறையை பெரும்பாலும் பின்பற்ற சொல்கிறார். செம்பருத்தி, சீகைக்காய், சூடான எண்ணெய் போதும் என்கிறார்.
மேக்கப் அதிகம் பயன்படுத்துவதே இல்லை என்றும், பெரும்பாலும் கண்மை, எப்போதாவது லிப்ஸ்டிக் என்று சிம்பிளாக மேக்கப் குறித்து பேசி முடித்தார். உடைகளில் முதலில் கிடைக்கும் சைஸில் எடுத்துக்கொள்வாராம், அதன் பிறகுதான் டிசைன் எல்லாம் பார்ப்பாராம். பொதுவாக டார்க் ஸ்கின் உள்ளவர்கள் லைட் ட்ரெஸ்ஸும், லைட் ஸ்கின் உள்ளவர்கள் டார்க் ட்ரெஸ்ஸும் எடுக்கவேண்டும் என்று அவரது அம்மாவிடம் கற்றுக்கொண்டதாக கூறினார்.
எடை குறைந்த பின்பு பார்ப்பவர்கள், இளச்சுட்டியே என்று சொல்லும்போது ஒரு பெருமையும், சந்தோஷமும் வரும். முன்னிருந்த என்னையும் எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனால் இப்போது ஜீன்ஸ் போடும்போதெல்லாம் அழகாக தெரியும் ஷேப்கள் இன்னும் எடை குறைக்க உத்வேகம் தருவதாக குறிப்பிட்டார். அவர் குறித்த விமர்சனங்களை, பாடி சேமிங்கை குறித்து எந்த கவலையும் கொள்வதில்லை, பேசுபவர்கள் பேசிட்டும் என்றும், அவர் குடும்பத்தார் உடனிருப்பது நெகட்டிவிட்டியை துரத்த எளிதாக உள்ளது என்றும் கூறினார்.