வடிவேலு என்னும் மாபெரும் சகாப்தம் சரிவை சந்தித்த சமயத்தில் பல காமெடியன்கள் தங்களது திறமையால் கோலிவுட்டின் காமெடி கோப்பைகளை நிறைத்து வருகின்றனர். அந்த வகையில் தனது மாறுபட்ட மேனரிசம் மற்றும் குரலை உயர்த்தி பேசும் தொணியால் பலரை கவர்ந்திருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. ஜாலி இயக்குநர் என நெல்சனின் கண்டுபிடிப்புதான் கிங்கிஸ்லி. கோலமாவு கோகிலா மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானாலும் முன்னதாக அவள் வருவாளா திரைப்படத்தின் பாடல் ஒன்றிலும் குழுவில் நடன கலைஞராக இருந்திருக்கிறார்.
அதன் பிறகு சொந்தமாக நடன பள்ளி ஒன்றை தொடங்கி , ஈவெண்ட்ஸ்களை எடுத்து நடத்தி வந்திருக்கிறார். அதே போல தீவுத்திடன் பொருட்காட்சிகளின் ஆர்கனைஸராகவும் இருந்திருக்கிறார். இப்படியான சூழலில்தான் இயக்குநரான நெல்சன் கல்லூரி மாணவராக கிங்ஸ்லிக்கு அறிமுகமாகியிருக்கிறார். நெல்சன் முதன் முறையாக இயக்கவிருந்த திரைப்படம் வேட்டை மன்னன் , இந்த திரைப்படத்தில் காமெடியனாக நடித்திருந்தாராம் கிங்ஸ்லி . ஆனால் அந்த படம் பாதியிலேயே தடைப்பட்டது. எப்படி கிங்ஸ்லியை நான் சந்தித்தேன் என்றும் , அவரை ஏன் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தேன் என்றும் இயக்குநர் நெல்சன் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிரார்.
அதில் “நான் காலேஜ் படித்த காலத்தில் , கல்லூரியில் கலைநிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதற்காக பலூர் இயக்குநர் ஸ்ரீநிஷ் இருக்காருல அவர் என்னுடைய கிளாஸ் மேட். அவர்தான் ஒரு டான்ஸ் மாஸ்டரிடம் நடனம் கற்றுக்கொண்டு , நடனம் ஆடினால் பரிசை தட்டிச்செல்லலாம் என ஐடியா கொடுத்தான். அதன் பிறகு எங்களிடம் ஆளுக்கு 200 ரூபாய் வசூலித்துக்கொண்டு , 2000 ரூபாயை சேர்த்து எங்களை ஒரு டான்ஸ் ஸ்கூலுக்கு அழைத்து சென்றான். மும்பை கிரைம் படத்துல எல்லாம் காட்டுறது மாதிரி , டீப்பா உள்ளே உள்ளே போயிட்டே இருக்கு. அங்க போனது ஒருத்தர் குழந்தைகள் எல்லாம் சருக்கி விளையாடு ஷேப்புல பாதியா நின்னுட்டு இருந்தாரு. பலூன் பேகி பேண்ட் , பெரிய சட்டை, 5 பட்டன்ல நாலு பட்டன் ஒப்பன் , கடைசி பட்டன் மட்டும்தான் போட்டுருக்காரு. தலை முடி அதிகம் . எனக்கு பார்த்ததுமே மச்சான் வேலைக்கு ஆகாது காச கொடு போறேன்னு சொன்னேன். அவன் பயந்து பயந்து பேசுறான் எனக்கு பார்த்தாலே சிரிப்பா வருது. உடனே கிங்ஸ்லி , என்னடா வேணும் உங்களுக்கெல்லாம்னு கேட்க , அவன் இல்லை மாஸ்டர் டான்ஸ் ஆடனும்னு சொன்னது. சரி காசு கொடு எல்லாம் பார்த்துகலாம்னு , அவர் முன்னால போய் நின்னுட்டு ஒரு 4 ஸ்டெப் போட்டாரு, அது எங்களுக்கு வரலை. அந்த 4 ஸ்டெப்பை தவிர அவருக்கும் வேற வரல. எனக்கு அப்போவே அவரை பார்த்தப்போ ரொம்ப க்யூட்டா , தனித்துவமான ஆளா தெரிஞ்சது. அதனால அவர் எப்போதா இருந்தாலும் பயன்படுத்தனும்னு ஒரு ஆசை வந்துடுச்சு .” என்றார் நெல்சன்.