கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் ரிச்சர்ட் லூயிஸ் உயிரிழந்துள்ளார்.


ரிச்சர்ட் லூயிஸ் (Richard Lewis)


1947 ஆம் ஆண்டு ப்ரூக்லினில் பிறந்தவர் ரிச்சர்ட் லூயிஸ். நியூயார்க்கில் இருக்கும் பல்வேறு கிளப்களில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்திய ரிச்சர்ட் லூயிஸ் காமெடி நிகழ்ச்சிகளின் வழியாக திரையில் அறிமுகமானார். பின் திரைப்படங்களில்  நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கிய இவர் ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக மாறினார்.






வயது மூப்பின் காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரிச்சர்ட் இன்று லாஸ் எஞ்சல்ஸில் இருக்கும் தனது வீட்டில் காலமானார். அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  ரிச்சர்ட் லூயிஸின் இறப்பு தொடர்பாக அவரது  விளம்பரதாரர் ஜெஃப் ஆபிரகாம் அறிக்கையில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார். ரிச்சர்ட் லூயிஸின் இறப்புக்கு ஹாலிவுட் திரையுலகினர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.