ஹாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் வெளியான 'தி ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' சீரிஸ் திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இப்படத்தின் 10 பாகங்கள் இதுவரையில் வெளியாகி உலகளவில் வரவேற்பை பெற்றதுடன் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி சாதனை படைத்தது. பைக், கார் ஸ்டண்ட்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படங்களில் வின் டீசல், ஜேசன் மோமோவா, மைக்கேல் ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அந்த வகையில் 'தி ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான ஹாலிவுட் நடிகரான வின் டீசல் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது ஹாலிவுட் திரையுலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
56 வயதான நடிகர் வின் டீசல் நடிப்பை தாண்டியும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். ஒரு படத்தில் நடிக்க அவர் சுமார் 200 முதல் 300 கோடி வரை சம்பளமாகப் பெறுகிறார் எனக் கூறப்படுகிறது. மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக இருந்து வரும், வின் டீசலின் உதவியாளராக பல ஆண்டுகளுக்கு முன்னர் பணிபுரிந்தவர் ஆஸ்டா ஜோனாசன். இவர் நேற்றைய தினம் வின் டீசல் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து லாஸ் ஏஞ்சல்ஸில் வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஆஸ்டா ஜோனாசன் கூறியுள்ள தகவலின்படி இந்த சம்பவம் 2010ம் ஆண்டு நடைபெற்றுள்ளது. 'ஃபாஸ்ட் ஃபைவ்' படத்தின் படப்பிடிப்பு அட்லாண்டாவில் நடைபெற்றபோது அங்கு ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருந்துள்ளார் வின் டீசல். அப்போது அவர் தங்கி இருந்த அறையில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும், அந்த சமயத்தில் புகைப்படக் கலைஞர்கள் அங்கே வரும் தகவல் தெரிந்தால் அந்தப் பெண்களை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதற்கு பிறகு அவரை படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும் வேலை அஸ்ட்ரோ ஜோனாசனுக்கு வழங்கப்பட்டதாகவும், அவரை உல்லாசமாக வைத்துக் கொள்வதற்காக வந்த பெண்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பியதால் அஸ்ட்ரோ ஜோனாசனிடம், வின் டீசல் மோசமாக நடந்து கொண்டதாகவும், மேலும் ஆஸ்டா ஜோனாசன் அவருக்கு ஒத்துழைக்க மறுத்ததால், வின் டீசலின் சகோதரி உடனைடியாக அஸ்ட்ரோ ஜோனாசனை வேலையை விட்டு தூக்கிவிட்டதாகவும் தற்போது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்று 13 ஆண்டுகளுக்கு பிறகு வின் டீசல் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆஸ்டா ஜோனாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்குப் பதிவு செய்துள்ளது ஹாலிவுட் திரையுலகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்டா ஜோனாசன் வழக்கு சம்பந்தமாக வின் டீசல் தரப்பில் இருந்து எந்த ஒரு மறுப்போ அல்லது தகவலோ வெளியாகவில்லை என ஹாலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹார்வே வெயின்ஸ்டீனை தொடர்ந்து தற்போது வின் டீசல் மீதும் மீ டூ பாலியல் விவகாரங்கள் தற்போது தலைதூக்க ஆரம்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.