பிரபல ஹாலிவுட் நடிகரான கியானு ரீவ்ஸ் தனது நீண்ட நாள் தோழியான அலெக்ஸாண்ட்ரா கிராண்டை திருமணம் செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கியானு ரீவ்ஸ்:

தி மேட்ரிக்ஸ், ஸ்பீடு, ஜான் விக் ஆகிய ஹாலிவுட் படங்களின் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர். ஹாலிவுட் நடிகர் கியானு ரீவ்ஸ், மிகவும் எளிமையான வாழ்க்கை வந்த கியானு ரீவ்ஸ் மேட்ரிக்ஸ் படத்தின் 70% சம்பளத்தை லுகேமியா ஆராய்ச்சிக்கு நன்கொடையாக வழங்கினார்கியானு ரீவ்ஸ் பல தசாப்தங்களாக திரையுலகில் ஒரு முக்கிய நபராகத் திகழ்ந்து வரும் இவர் திருமணமாகமல் இருந்து வந்தார்.

அடுத்தடுத்த சோகம்:

மக்களிடையே பிரபலமாக இருந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கை அவ்வளவு இனிப்பதாக அமையவில்லை. 1999 ஆம் ஆண்டில், ரீவ்ஸும் அவரது அப்போதைய காதலி நடிகை ஜெனிஃபர் சைமும் தங்களது குழந்தையை இழந்தனர். இந்த துயர சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குள் அதவாது 2001 ஆண்டு 28 வயதில் ஒரு கார் விபத்தில் இறந்தார். இதனால் மீளாத சோகத்திற்கு சென்றார் ரீவ்ஸ். ஒரு காலத்தில் "துக்கமும் இழப்பும் ஒருபோதும் உண்மையிலேயே மறைந்துவிடாது" என்று நினைத்துப் பார்த்தார்.

நட்பில் வேரூன்றிய உறவு

அதன்பின் 2009 ஆண்டு அலெக்ஸாண்ட்ரா கிராண்டை முதல் முறையாக சந்தித்தார். அவரது சந்திப்பிற்கு பிறது தனது பழைய இழப்பில் இருந்து ரீவ்ஸ் மீண்டு வர காரணமாக இருந்ததாக அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் நண்பர்களாக இவர்களின் உறவு தொடங்கி பின்பு அது  காதலாக மலர்ந்தது. புத்தகங்கள் உட்பட பல ஆண்டுகளாக படைப்புத் திட்டங்களில் இருவரும் இணைந்து பணியாற்றி வந்திருந்தாலும், 2019 இல் அவர்கள் தங்கள் உறவை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். 52 வயதான கிராண்ட் ஒரு பிரபலமான காட்சி கலைஞர் மற்றும் எழுத்தாளர். ரீவ்ஸின் நண்பர் கிராண்டை ரீவ்ஸின் வாழ்க்கையில் ஒரு நிலையான இருப்பு என்று விவரிக்கிறார்கள், மேலும் அவளை "ராக்" என்று அழைக்கிறார்கள் மற்றும் கடினமான காலங்களுக்குப் பிறகு அவருக்கு அமைதியைக் கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். 

ரகசியமாக நடந்த திருமணம்:

இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஐரோப்பா முறைப்படி ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 60 வயதான கியானு ரீவ்ஸ் 52 வயதான கிராண்டை திருமணம் செய்துக்கொண்டது அவரது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது, இருப்பினும் இவர்களது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை