திரைப்படங்களுக்கு இசையமைப்பது தவிர்த்து இசையமைப்பாளர்களுக்கு இசை நிகழ்ச்சிகள் பெரிய மார்கெட் ஏற்படுத்தி கொடுத்துள்ளன. மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக இருந்த கான்சர்ட் கலாச்சாரம் தற்போது இந்தியாவிலும் பெரியளவில் வளர்ந்துள்ளது. இசைஞானி இளையராஜா , ஏ.ஆர் ரஹ்மான் , அனிருத் , ஹாரிஸ் ஜெயராஜ் , விஜய் ஆண்டனி , வித்யாசாகர், தேவா , யுவன் சங்கர் ராஜா போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் சினிமா தவிர்த்து வெவ்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். 

Continues below advertisement

இந்த நிகழ்ச்சிகளின் மூலம் இசையமைப்பாளர்களுக்கு பெரியளவில் வருமானம் குவிந்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் திரைப்படங்களைக் காட்டிலும் இசை நிகழ்ச்சிகளில் தான் அதிகம் சம்பாதித்திருப்பதாக இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்

ஹிப்ஹாப் ஆதி 

தமிழ் சூழலில் சுயாதீன இசை பெரியளவில் வளராத காலம் முதல் ராப் பாடல்களை சொந்தமாக தயாரித்து வெளியிட்டு வந்தவர் ஹிட்ஹாப் தமிழா என்று பிரபலமாக அறியப்படக்கூடிய ஆதி. எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தனது பாடல்களின் வழி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். அனிருத் இசையில் எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலை பாடினார். இதனைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கிய ஆம்பள படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். 'இன்று நேற்று நாளை , மீசைய முறுக்கு , தனி ஒருவன் , அரண்மனை , கதகளி , கத்தி சண்டை , இமைக்கா நொடிகள் என குறைந்த காலத்தில் அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைத்தார். 

Continues below advertisement

மீசையை முறுக்கு படத்தை இயக்கி இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றிக்கண்டார். தொடர்ந்து நட்பே துணை , அன்பறிவு , நான் சிரித்தால் , வீரன் , பிடி சார் , கடைசி உலகப்போர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

இசை நிகழ்ச்சிகளில் 160 கோடி சம்பாத்தியம் 

அண்மையில் பேட்டி ஒன்றில் திரைப்படங்களை விட தான் இசை நிகழ்ச்சிகளில் அதிகம் சம்பாதிப்பதாக ஹிப்ஹாப் தமிழா தெரிவித்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டில் இசை நிகழ்ச்சிகளின் வழியாக மட்டும் ஹிப்ஹாப் ஆதி 160 கோடி வரை சம்பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.