ஆமீர் கான் வரும் ஜூலை 5 ஆம் தேதி தான் தனது காதலி  கெளரி ஸ்ப்ராட்-ஐ திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தந்து நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் தனது இல்லத்தில் இந்த திருமண நிகழ்வு நடைபெற இருப்பதாக ஆமீர் கான் தெரிவித்துள்ளார். 61 ஆவது வயதில் தனது மூன்றாவது திருமணத்தை ஆமீர் கான் அறிவித்துள்ள நிலையில் இந்துத்துவ கும்பல் அவர் மீது சமூக வலைதளத்தில் வன்மத்தை கொட்டி வருகிறார்கள். ஆமிர் கான் தொடர்ச்சியாக இந்துப் பெண்களை திருமணம் செய்துகொண்டு பின் அவர்களை விவாகரத்து செய்துவிடுவதாக இவர்கள் பதிவிட்டு வருகிறார்கள். 

Continues below advertisement

ஆமீர் கான் மூன்றாவது திருமணம் 

நடிகர் ஆமீர் கான் 1986-இல் ரீனா தத்தாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜுனைத் கான் மற்றும் ஐரா கான் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். 2002-இல் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.

2005 இல் கிரண் ராவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆசாத் ராவ் கான் என்ற மகன் உள்ளார். இவர்களும் 2021-இல் விவாகரத்து பெற்றனர்.

Continues below advertisement

விவாகரத்து பெற்றபோதும் ஆமீர் கான் தனது எக்ஸ் மனைவிகளுடன் நல்ல நட்புறவில் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு ஆமீர் கான் தனது காதலி கெளரி ஸ்ப்ராட் என்பவரை ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். கெளரி ஸ்ப்ராட் முன்னதாக திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது மும்பையில் கெளரி சொந்தமாக சலோன் வைத்து நடத்தி வருகிறார்.

இந்து பெண்களை ஏமாற்றும் ஆமீர் கான்

ஆமீர் கானி திருமண தேதி வெளியாகியுள்ள நிலையில் அவர் மீது சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட சிலர் வனமத்தை காட்ட தொடங்கியுள்ளார்கள். இந்துப் பெண்களை காதலித்து அவர்களுடன் சில காலம் வாழ்ந்து , குழந்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை விவாகரத்து செய்வதே ஆமீர் கானின் வழக்கமாக இருந்து வருவதாக அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.