பிறந்தநாள் காணும் ரஜினிகாந்த்


டிசம்பர் 12 ஆம் தேதி பிறந்த ரஜினிகாந்த் தனது, 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க பல ரசிகர்களும், பிரபலங்களும் போயஸ் கார்டனில் உள்ள இவரின் இல்லத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், இவர் ஊரிலேயே இல்லை என்பது, அவரின் ரசிகர்களை வருத்ததிற்கு உள்ளாக்கியுள்ளது.






ரஜினி நடித்த பாபா படம் ரீ-ரிலீஸாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அத்துடன் இவர் நடித்த சிவாஜி படம் ஒரு சில திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இவரின் பிறந்தநாளையொட்டி இன்று மாலை 6 மணிக்கும் ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளது.


மகளை அறிமுகப்படுத்திய ஆர்யா


ஆர்யா தனது 42வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் தெரிவித்தனர். அதையொட்டி ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா சிறப்பு பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டார். அதில் ஆர்யாவுடன் இணைந்திருக்கும் பல புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. 






அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுக்குப் பிறந்தநாள் பரிசாக தனது மகள் ஆரியானாவையும் வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியது



வருகிறது ஜிகர்தண்டா 2 


கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு, ஜிகர்தண்டா மீண்டும் உருவாக்கப்படுகிறது என்று வந்த அறிவிப்பால் ரசிகர்கள் குஷியாகினர். இதனிடையே இந்தப்படத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. 


                             


இதை உறுதிபடுத்தும் விதமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற தலைப்பில் படத்தின் டீசரை இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. படத்தின் டீசரை பார்க்கும்போது இது 80 காலக்கட்டத்தில் நடக்கின்ற கதை போல உருவாக்கப்பட்டுள்ளது. 


கொலை செய்யப்பட்ட பாலிவுட் பிரபலம்




ஹிந்தி படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமாக இருந்தவர் வீணா கபூர்(74). மும்பையில் வசித்து வந்த இவரை சொந்த மகனே கொடூரமான முறையில் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவில் வீணா கபூர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


ஜோக்கர் படத்தின் புதிய அப்டேட்


டிசி காமிக்ஸ் கதாபாத்திரமான ஜோக்கர் திரைப்படத்திற்கான இரண்டாம் பாகத்தின், புதிய அப்டேட்டை அப்படத்தின் இயக்குநர் டாட் பிலிப்ஸ் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.






ஜோக்கர் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக இயக்குனர் டாட் பிளிப்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜோக்கர் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் பங்கேற்க, நடிகர் ஜாக்குவின் ஃபீனிக்ஸ் தயாராகி வருவது தொடர்பான புகைப்படம் இடம்பெற்றுள்ளது.