Saif Ali Khan: சைப் அலிகான் உடலில் ஏற்கனவே 100 தையல் போடப்பட்டிருக்கிறதா? மருத்துவர் கூறிய அதிர்ச்சி தகவல்!

மன வலிமையின் காரணமாகவே சைஃப் அலி கான் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

Continues below advertisement

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மும்பை பாந்த்ரா பகுதியில் வசித்து வந்த நிலையில் அவரது வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையன் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடு விட்டார். இதையடுத்து படுகாயமடைந்த சைஃப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். 

Continues below advertisement

சைஃப் அலி கான் பிறப்பிலேயே வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய சொத்து மதிப்பு ரூ.1300 கோடி என்று கூறப்படுகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சைஃப் அலி கான், பரம்பர என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்தார். கடைசியாக ஜூனியர் என் டிஆர் நடிப்பில் உருவான தேவரா பார்ட் 1 என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் போதுமான வரவேற்பு பெறவில்லை. தற்போது Jewel Thief: The Red Sun Chapter என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் கடந்த 16ஆம் தேதி கொள்ளையரால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தீவிர சிகிச்சைக்கு பிறகு 21ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக 2000 ஆம் ஆண்டில் கியா கெனா என்கிற படத்திற்காக பைக் காட்சியில் நடிக்க அவர் பயிற்சி மேற்கொண்ட போது,  எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் பல முறை கீழே விழுந்துள்ளார். அப்போது அவருக்கு 100 தையல்கள் போடப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது என்னதான் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தாலும் சைஃப் அலிகானின் மன வலிமையே அவரை முழுவதுமாக குணமடையச் செய்தது என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இந்த தகவல் பிரமிக்க வைத்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola