ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்தாண்டு வெளியான லப்பர் பந்து திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்றது. இப்படத்தின் வெற்றியால் ஹரிஷ் கல்யாணின் மார்க்கெட்டும் உயர்ந்திருக்கிறது. தற்போது அவர் நடித்திருக்கும் டீசல் திரைப்படம் ஆக்சன் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது. சண்முகம் முத்துச்சாமி இயக்கியிருக்கும் இப்படத்தில் வினய், கருணாஸ், காளி வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர்.
டீசல் படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தில் இடம்பெற்ற பீர் பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கியுள்ளது. ஒரு படத்திற்கு கிடைக்கும் ரீச்சை விட அந்த பாட்டு இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. திரை பிரபலங்கள் பலரும் இப்பாட்டிற்கு ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரில் அதிகாரத்தையும், பண பலத்தில் இருப்பவர்களை எதிர்த்து சண்டையிடும் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார்.
டீசரில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள் ஜனரஞ்சமாக இருக்கிறது. சாதுவாக, பக்கத்து வீட்டி பையன் போல் தோன்றிய ஹரிஷ் கல்யாண் முதல் முறையாக பவர் புல் ஹீரோவாக ஆக்சனில் களமிறங்கியிருக்கிறார். வில்லன்களை வேட்டையாடும் ஹீரோ தந்திரமாக எப்படி செயல்படுகிறார் என்பதை இந்த டீசரில் காட்டப்பட்டுள்ளது. மேலும், டீசல் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் எல்ஐகே, ட்யூட் படங்கள் தீபாவளி ரேஸில் இருக்கிறது. பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியாக ஹரிஷ் கல்யாணும் தீபாவளி ரேஸில் இடம்பிடித்திருக்கிறார். ரசிகர்களுக்கு பட்டாசானா தீபாவளியா இருக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.