இளையராஜ தனது பிறந்தநாளையொட்டி அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நீங்கள் தான் எனக்கு சொல்லுகிறீர்கள். நான் எனது மகளை பறிகொடுத்ததால் எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. உங்களுக்காகத்தான் இந்த கொண்டாட்டம்” எனத் தெரிவித்தார். 


எந்த பக்கம் திரும்பினாலும் எப்படி திசை உண்டோ அதேபோல் எந்த மனநிலையிலும் கேட்க இளையராஜாவின் இசை உண்டு. அதனால்தான் அவர் இசைஞானியாக திகழ்கிறார். இன்று அவர் தனது 81ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 


இதையொட்டி அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை வாரி குவித்து வருகின்றனர். இசைஞானியின் பயோபிக்கில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ், இளையராஜா படத்தின் போஸ்டர் ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 






இதுமட்டுமில்லாமல் அவரின் பல்வேறு தரப்பு ரசிகர்கள் வாழ்த்து செய்திகளை குவித்து வருகின்றனர். அவரவருக்கு பிடித்த இசைகளையும் பதிவிட்டு மூழ்கி வருகின்றனர்.