ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள ஹனுமான் அன்ஷ் படம் வெளிநாடுகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Continues below advertisement

மாஸ் காட்டிய ஹனுமான் அன்ஷ் படம்

இந்தியாவில் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தி பக்தி திரைப்படம் ‘ஹனுமான் அன்ஷ்’. நீம் கரோலி பாபா என அழைக்கப்படும் மகாராஜ் ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், தற்போது வெளிநாடுகளிலும் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் சோபினா சத்யா, விஹான் ஷெட்ஜ், சந்தன் ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் முதல் நாள் ரூ.10 லட்சம் மட்டுமே வசூல் செய்தது. அதன்பிறகு முதல் வாரத்தில் ரூ.1.08 கோடி வசூலித்தது. படம் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. ஒரு மாதத்தில் இப்படம் ரூ.10 கோடி வரை வசூல் செய்தது மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்த படம் இதுவரை ரூ.54 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Continues below advertisement

விஷால் சதுர்வேதி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் பணியை ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது. இதையடுத்து, செப்டம்பர் 11 ஆம் தேதி இப்படம் சர்வதேச திரையரங்குகளில் வெளியாகிறது.

என்ன தான் படத்தின் கதை?

மகாராஜ் ஜி என்று பக்தர்களால் அழைக்கப்படும் நீம் கரோலி பாபா, அன்பு, பக்தி, சேவை ஆகியவற்றை தனது போதனைகளின் முக்கிய அம்சங்களாக கொண்ட ஆன்மிகத் தலைவராக போற்றப்படுகிறார். அவரது ஆன்மிக தாக்கம் இந்தியாவைத் தாண்டியும் பலரிடம் சென்றடைந்துள்ளது.

குறிப்பாக, 1960 மற்றும் 1970-களில் ஆன்மிகத் தேடலுடன் இந்தியாவுக்கு வந்த மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலரிடமும் அவரது போதனைகள் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே வெளியாகியுள்ள ‘ஹனுமான் அன்ஷ்’ திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ரசிகர்களின் பாராட்டும், தொடர்ந்து கிடைத்து வரும் வரவேற்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நீம் கரோலி பாபாவின் ஆன்மிக தாக்கம் உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர்களான ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் ஆகியோருடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

1974-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ், மகாராஜ்-ஜியை சந்திக்கும் நோக்கத்தில் இந்தியாவுக்கு வந்ததாகவும், பின்னர் ஜாப்ஸின் ஆலோசனையின் பேரில் மார்க் ஸக்கர்பெர்க் தனது வாழ்க்கையில் சவாலான காலகட்டத்தை எதிர்கொண்டபோது கைஞ்சி தாமுக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலியா ராபர்ட்ஸும் தனது ஆன்மிகப் பயணத்தில் நீம் கரோலி பாபா ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேசியுள்ளார். இந்திய பிரபலங்களான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரும் நீம் கரோலி பாபாவுடன் நெருங்கிய தொடர்புடையதாக கருதப்படும் கைஞ்சி தாம் பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்தியாவில் இருந்து தற்போது வெளிநாடுகளுக்கும் பயணிக்கும் ‘ஹனுமான் அன்ஷ்’, எல்லைகளைக் கடந்து மகாராஜ்-ஜியின் வாழ்க்கை மற்றும் ஆன்மிகப் பயணத்தை உலக ரசிகர்களிடம் கொண்டு செல்ல இருக்கிறது. கைஞ்சி தாமில் இருந்து உலக ரசிகர்கள் வரை  மகாராஜ் ஜியின் கதை தற்போது எல்லைகளைக் கடந்து பயணிக்கிறது. ‘ஹனுமான் அன்ஷ்’ திரைப்படம் செப்டம்பர் 11, 2026 அன்று சர்வதேச திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.