தமிழ் சினிமாவின் குட்டி குஷ்பூ ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவுக்கும் சில தினங்களுக்கு முன்னர் மிகவும் பிரமாண்டமாக ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில்  திருமணம் நடைபெற்றது.  அவர்களின் திருமணம் சடங்குகள், சம்பிரதாயங்கள் என திருமண கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வந்தது. அந்த வகையில் ஹன்சிகா மோத்வானி - சோஹைல் கதுரியா வெளிவராத ப்ரீ வெட்டிங் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. 


 



 


லேட்டஸ்ட் போஸ்ட் :


ஹன்சிகா மோத்வானி அவரின் கணவர் சோஹைல் கதுரியா மற்றும் தாய் மோனா மோத்வானி மற்றும் சகோதரருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில் ஹன்சிகா தனது காஸ்டியூம் டிசைனரால் வடிவமைக்கப்பட்ட இளஞ்சிவப்பு லெஹங்காவிலும், அவரது கணவர் சோஹைல் கதுரியா ரீகல் நீல நிற ஷெர்வானியிலும் காணப்பட்டனர். இந்த வெளிவராத ப்ரீ வெடிங் புகைப்படங்களை தற்போது ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கம் போஸ்ட் செய்துள்ளதால் அவை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறன்றன. இந்த லேட்டஸ்ட் போஸ்டிற்கு லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது.  


 






 


ஹன்சிகாவின் சினிமா ரவுண்டு அப் :


டிசம்பர் 4ம் தேதி நடைபெற்ற இந்த அழகான ஜோடியின் திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது.  அவர்களின் வாழ்த்துகளோடு ஹன்சிகா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பை  முடித்துவிட்டார். விரைவில் மற்ற திரைப்படங்களின் படப்பிடிப்பில் ஈடுபடுவார் என தெரிகிறது.  விரைவில் ஹன்சிகாவை திரைப்படங்களில் பார்ப்பதற்காக மிகவும் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள் ரசிகர்கள்.