இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் “மின்மினி” படப்பிடிப்பு கிட்டத்தட்ட 7 வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்குகிறது. 


சில்லு கருப்பட்டி, ஏலே, மற்றும் அமேசான் பிரைமில் வெளியான புத்தம் புது காலை விடியாதா” தொகுப்பில்  இடம் பெற்ற"லோனர்ஸ்" ஆகிய படங்களை இயக்கியதின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் ஹலிதா ஷமீம். இவர் திரைப்படத் துறையில் ஒரு திரைப்படத்தை 7 ஆண்டுகளுக்கு மேலாக எடுத்து வருகிறார். அந்தப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அவர் ஒரு காரணத்திற்கு அடுத்த கட்ட படப்பிடிப்பை 7 ஆண்டுகளாக துவங்காமல் இருந்திருக்கிறார். அந்தப்படத்தின் பெயர்  மின்மினி.




 


அதன் படப்பிடிப்பு 7 ஆண்டுகள் முன்பு (2015)ல் தொடங்கப்பட்டது. குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதைதான் படத்தின் ஒன்லைன். முதற்கட்ட படப்பிடிப்பில் குழந்தை பருவ காட்சிகளை படமாக்கிய ஹலிதா, அவர்களின் முதிர்ச்சியடைந்த லுக்கிற்காக இந்த 7 வருட இடைவெளியை விட்டு இருக்கிறார்.


இந்த நிலையில் தற்போது இந்தப்படத்தின் படப்பிட்ப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அவரது இந்த புது முயற்சி திரையுலகில்  கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘பீஸ்ட்’ படத்தில் கேமாராமேனாக பணியாற்றிய  ‘மனோஜ் பரமஹம்சா’ இந்தப்படத்தில்  ஒளிப்பதிவாளராக பணியாற்றுவதுடன்,  Anchor Bay Studios நிறுவனத்துடன் இணைந்து இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.



  


மின்மினி படத்தில் எஸ்தர் அனில் (பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்தவர்), பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.