ஜப்பான்


ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் 25-வது உருவாகி இருக்கும் படம்  ஜப்பான். ஜப்பான் படத்தின் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கார்த்தி, ராஜு முருகன் , ஜப்பான் படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர் பிரபு, நடிகர் பொன்வண்ணன், சத்யராஜ் , சிபி சத்யராஜ், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் ஹெச் வினோத் , லோகேஷ் கனகராஜ், பா ரஞ்சித் , சுசீந்திரன் மேலும் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.


கார்த்தி நடித்த படங்களின் இயக்குநர்களான முத்தையா, எச் வினோத், பி.எஸ் மித்ரன் உள்ளிட்டவர்கள் கார்த்தி பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்கள்


இயக்குநர் முத்தையா


பருத்தி வீரனுக்கு அப்புறம் முழுக்க கிராமத்து கேரக்டர் கொம்பன் படத்தில்தான் பண்ணினார். பருத்தி வீரன் படத்தின் வெற்றி எங்களை மாதிரி மண் சார்ந்த கதைகளை எடுப்பவர்களிடம் இனிமேல் நாம என்ன பண்ண போறோம்ன்னு தான் தோணுச்சு. குட்டிப்புலி படம் முடிச்சிட்டு கொம்பன் படத்துக்கு கதையை போய் சொன்னேன். எல்லாம் கேட்டுட்டு எப்படி பருத்தி வீரன் கேரக்டரை மறக்க வைக்க போறோம்னு கேட்டார். அந்த படம் முழுக்க மதுரை மாவட்டத்தை அடிப்படையாக கொண்டது.


கொம்பன் ராமநாதபுரத்தை கதைக்களமாக கொண்டது. அங்க வந்து பாருங்க. புதுசா இருக்கும்னு சொன்னேன். கார்த்தி ஒரு படத்துல ஒரு கேரக்டர் பண்ணாருன்னா அதே மாறி கேரக்டர் வெற படத்துல வந்தா வித்தியாசம் காட்டுவாரு (உதாரணமாக சிறுத்தை, தீரன், சர்தார் படங்களில் போலீஸ் கேரக்டர்) கொம்பன் படத்துக்கு கெடா மீசை வெச்சதும் ஒரு லுக் வந்துடுச்சு. ஒவ்வொரு சீன் பண்ணும் போதும் டிரஸ் கூட முந்தைய படங்களில் இருக்குற மாதிரி வரக்கூடாது என நினைப்பார்” என்று இயக்குநர் முத்தையா பேசினார்


பி.எஸ்.மித்ரன் 


கார்த்தி ஷூட்டிங் ஷெட்யூல் போடுறப்ப ஞாயிற்றுகிழமை லீவு வேணும்னு என சொல்வார். ஆனால் அன்னைக்கு கூட போன் பண்ணி அடுத்த சீன் பத்தி பேசுவாரு. 24 மணிநேரமும் சினிமா பத்தியே பேசுவாரு கார்த்தி.


ஹெச். வினோத் 


கார்த்தி படங்கள் ஒரு ட்ரெண்ட் செட்டரா இருந்துருக்கு. டிரெண்ட் செட்டர் இயக்குநர்களை உருவாக்கி இருக்கு. ராஜு முருகன் சமூகம் சார்ந்து, அரசியல் சார்ந்து படம் எடுத்து இருக்காரு. ஆனால் ஒரிஜினல் ராஜு முருகன் யாருன்னு ஜப்பான் படம் வந்த பிறகு தெரியும்.


ஜப்பான் திரைப்பத்தில் கார்த்தி , அனு இமானுவேல், சுனில், கே.எஸ் ரவிகுமார், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் உள்லிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஜி. வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.


லோகேஷ் கனகராஜ்


கைதி படம் முழுக்க நைட்டு தான் ஷூட் நடந்துச்சு. ஒரே மாதிரி சீன் தொடர்ச்சியாக எடுக்குறோம்ன்னு சண்டை போடுவோம்.அவர் எப்பவும் சினிமா பத்திதான் பேசுவாரு. உதவி இயக்குநராக இருந்து மிகப்பெரிய ஹீரோவாக. வந்ததால் சினிமா பத்தி அனைத்து கோணங்களிலும் பார்ப்பார். சினிமா தவிர அவர் சீரியஸ் சீன் எடுக்கும்போது கூட கவுண்டமணி காமெடி பத்தி அதிகமா பேசுவாரு.