இசை புயல் ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் தான் ஜிவி பிரகாஷ். இசை குடும்ப பின்னணியை கொண்டவர் என்பதால் சிறு வயதிலேயே சில படங்களில், அதுவும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த படங்களில் பாடும் வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. இதை தொடர்ந்து, தன்னுடைய இளம் வயதிலேயே 'வெயில்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி முதல் படத்திலேயே... தன்னுடைய இசையால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
அடுத்தடுத்து வெளியான படங்களிலும் இவரின் இசை, ரசிகர்களை மட்டும் இன்றி, முன்னணி நடிகர்களையும் உற்று நோக்க வைத்தது. தற்போது வெற்றிகரமாக 100 படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதே போல் பென்சில் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜிவி-க்கு, திரிஷா இல்லனா நயன்தாரா, டார்லிங் போன்ற படங்கள் ஆரம்பத்திலேயே வெற்றி நாயகன் என்கிற அடையாளத்தை கொடுத்தது.

தன்னுடைய பள்ளி பருவ காதலியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்த ஜிவி, கடந்த ஆண்டு விவாகரத்து தகவலை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். ஜிவி-யின் மகள் அன்வி தற்போது சைந்தவியுடன் உள்ளார். பொதுவாக நட்சத்திர ஜோடிகள் விவாகரத்தை அறிவித்துவிட்டால், அதன் பின்னர் மீண்டும் தங்களின் முன்னாள் கணவரை பார்ப்பதை மட்டும் அல்ல அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை கூட தவிர்த்து விடுவார்கள். ஆனால் சைந்தவி - ஜிவி ஜோடி கொஞ்சம் வித்தியாசமானவர். இருவரும் விவாகரத்துக்கு பின்னரும் கூட ஒன்றாக இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
தற்போது கிங்ஸ்டன் பட புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் ஜிவி பிரகாஷ் தன்னைப் பற்றியும் திவ்யபாரதி பற்றியும் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார். பேச்சுலர் படத்தில் நானும், திவ்யபாரதியும் இணைந்து நடித்ததால் தான் எனக்கும் சைந்தவிக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டதாக பலரும் கூறி வந்தார்கள். ஆனால், அதில் துளி கூட உண்மை இல்லை.
பேச்சுலர் படத்திற்கு பிறகு திவ்யபாரதியை நான் பார்க்க கூட கிடையாது. 'கிங்ஸ்டன்' படத்தில் தான் நான் அவரை பார்த்தேன். ஆனாலும் எங்களைப் பற்றி செய்திகளை திவ்யபாரதி தான் இந்த மாதிரி செய்தி வருகிறது என்று மெசேஜ் அனுப்புவார். அவ்வளவு தான் எங்களது உறவு என கூறியுள்ளார்.
இதே போன்று திவ்யபாரதி கூறுகையில், ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து நடிப்பதால் தவறாக பேசுகிறார்கள். பல பெண்கள் என்னை சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்தார்கள். உண்மையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் செம ஜோடி. அவர்கள் பிரிந்ததில் எனக்கும் அதிக வருத்தம் உள்ளது. பல நேரங்களில் என்னை பற்றிய வதந்தியை என்ன எதுவும் பதில் சொல்லாமல் கடந்து சென்றேன் என வேதனையோடு பேசியுள்ளார்.