Good Bad Ugly Release: இப்பவே ஆரம்பிச்சுட்டாங்கல.. குட் பேட் அக்லியால் தியேட்டரில் அஜித் ரசிகர்கள் அமர்க்களம்
good bad ugly release: குட் பேட் அக்லி திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

Good Bad Ugly Release: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படம் உலகெங்கிலும் நாளை ரிலீசாகிறது.
கிங் ஆஃப் ஓப்பனிங்:
தமிழ் திரையுலகின் கிங் ஆஃப் ஓப்பனிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித்குமார் படங்களுக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, முதல் நாளில் அவரது படத்தை பார்ப்பதற்காகவே மற்ற நடிகர்களின் கூட்டத்தை விட அதிகளவு ரசிகர்கள் உள்ளனர்.
Just In




அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர், ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கமாக அஜித் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை காட்டிலும் இந்த படத்திற்கு பல மடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருவிழா கோலம்:
படம் நாளை வெளியாக உள்ள நிலையில், குட் பேட் அக்லி படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் எல்லாம் முன்பதிவு முடிந்துவிட்டது. குட் பேட் அக்லி படம் நாளை வெளியாக உள்ள நிலையில், திரையரங்குகளில் இன்று மாலை முதலே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ், பிரபு என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். ஜாக்கி ஷெராஃப், சிம்ரன் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
கேங்ஸ்டர் திரைப்படம்:
கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். அவரது முந்தைய படமான விடாமுயற்சி அஜித்தின் வழக்கமான ஆக்ஷனாக இல்லாமல் அந்த படம் வெளியானது. இது அஜித் ரசிகர்கள் சிலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட படமாக இந்த படம் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அஜித்தின் ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களான தீனா, பில்லா, வாலி, வரலாறு, ரெட், அமர்க்களம், அட்டகாசம், மங்காத்தா ஆகிய படங்களின் ரெஃபரென்ஸ் மற்றும் வசனங்கள் படத்தில் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.