Ajith And Adhik Salary: 'மார்க் ஆண்டனி' ஹிட்டுக்கு பின் 4 மடங்கு சம்பளத்தை ஏற்றிய ஆதிக்! குட் பேட் அக்லீக்கு இத்தனை கோடி வாங்கினாரா?

அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் 'குட் பேட் அக்லீ' படத்திற்கு ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Continues below advertisement

'விடாமுயற்சி' படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முக்கியமான படம் 'குட் பேட் அக்லீ'. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில், அஜித், த்ரிஷா, சிம்ரன், அர்ஜூன் தாஸ், பிரசன்னா, பிரியா பிரகாஷ் வாரியர், சுனில், யோகி பாபு என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Continues below advertisement

குட் பேட் அக்லீ:

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அஜித்தின் 'குட் பேட் அக்லீ' படத்தை தயாரித்துள்ளது. மேலும், ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரூ.270 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி 24 மணிநேரத்தில் 28 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. அதே போல் இந்த படத்தில் இடம் பெற்ற OG Sambavam மற்றும் God Bless U ஆகிய பாடல்களின் லிரிக் வீடியோ தாறு மாறு வரவேற்பை குவித்தது மட்டும் இன்றி இளசுகளையும் ஆட்டம் போட வைத்தது.


'குட் பேட் அக்லீ' வரும் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் ரிலீஸ் ஆக  இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில்... ரசிகர்களும் அஜித்துக்கு கட் அவுட் வைக்க துவங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த படத்திற்காக அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் சம்பளம்:

அஜித் விடாமுயற்சி படத்திற்காக, ரூ.105 கோடி சம்பளமாக பெற்ற நிலையில்... குட் பேட் அக்லீ படத்திற்காக, ரூ.150 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளாராம். அதே போல், ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய முந்தைய படமான 'மார்க் ஆண்டனி' படத்திற்காக 2 கோடி மட்டுமே சம்பளமாக பெற்ற நிலையில் குட் பேட் அக்லீ படத்திற்காக, 4 மடங்கு அதிகமாக சம்பளமாக வாங்கியுள்ளாராம் அதன்படி ரூ.10 கோடி இவருக்கு சம்பளமாக கொடுக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola