போதை வழக்கில் சிக்கிய ஷைன் டாம் சாக்கோ 


சூத்ரவாக்கியம் படத்தின்  படப்பிடிப்பின் போது மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப் பொருள் பயண்பாட்டில் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மலையாள நடிகை வின்ஸி அலோசியஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலான பிறகு, AMMA, FEFKA, மற்றும் திரைப்பட சபை உள்ளிட்ட தொழில்துறை அமைப்புகள் அவரை புகார் அளிக்க ஊக்குவித்தன. WCC அவருக்கு ஆதரவளித்து, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.


இதற்கிடையில், காவல்துறையினர் தங்கள் சொந்த விசாரணையைத் தொடங்கியுள்ளனர், மேலும் ஏற்கனவே போதைபொருள் பயண்பாட்டு   வழக்கில் ஷைனின் பெயர் முன்னதாகவே வந்திருந்ததால், காவல் துறை வின்சியை விசாரிக்கக்கூடும்


ஹோட்டலில் இருந்து தப்பி ஓட்டம்



 கேரள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் நேற்று எர்ணாகுளத்தில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் சோதனை நடத்தியது. ஹோட்டல் அறையில் தனது நண்பர்களுடன் நடிகர் போதைப் பொருள் பயண்படுத்தி வருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஆனால் தகவலறிந்த நடிகர் ஹோட்டலின் ஜன்னல் வழியாக தப்பி ஓடினார். ஷைன் டாம் சாக்கோ ஹோட்டலில் இருந்து தப்பி ஓடிய சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு போதைப் பொருள் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது. 






இந்த புகாரை விசாரிக்க மலையால நடிகர் சங்கம் மூன்று நபர்களைக் கொண்ட  தனிக்குழு ஒன்று அமைத்துள்ளது. அன்சிபா ஹாசன், வினு மோகன் மற்றும் சரயு மோகன் ஆகியோர் அடங்கிய இந்தக் குழு, சூத்திரவாக்கியம் படப்பிடிப்பின் போது போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தகாத நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்.