ஷைன் டாம் சாக்கோ 

பிரபல மலையாள நடிகை வின்ஸி அலோசியஸ் படப்பிடிப்பின் போது மலையாள நடிகர் போதை பொருள் பயண்பாட்டில்  பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோ வெளியிட்டிருந்தார். " சூத்திரவாக்கியம் படப்பிடிப்பின் போது ஷைன் டாம் சாக்கோ  என்னுடைய ஆடையில் ஏதோ திருத்தம் இருந்ததாக கூறி அதை சரிசெய்ய கேரவேனில் உள்ளே வர முயற்சித்ததாக அவர் கூறினார். மேலும் படப்பிடிப்பின் போது அவர் போதைப் பொருட்கள் பயண்படுத்தி வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கேரள திரைப்பட நடிகர்கள் சங்கம் 'அம்மா ' விஸிக்கு ஆதரவு தெரிவித்து இதனை விசாரிக்க கோரிக்கை வைத்தது. 

 இதனைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது அவர் புகாரளித்துள்ளார். மலையாளத்தில் தள்ளுமலா , லவ் என  பல்வேறு படங்களில் நடித்த இவர் சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் கொச்சியில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு போலீஸ் அதிரடி ரைட் நடத்தியது. கொச்சியில் ஹோட்டல் ஒன்றில் ஷைன் டாம் சாக்கோ மற்றும் அவரது நண்பர்கள் போதைப் பொருள் பயண்படுத்தி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த ரைட் நடந்த்தப்பட்டது. ஆனால் சுதாரித்த நடிகர் ஹோட்டல் ஜன்னல் வழியாக தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் கேரளா திரைத்துறையில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டலில் இருந்து நடிகர் தப்பி ஓடும் சிசிடிவி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

முன்னதாக 2015 ஆம் ஆண்டு  கொக்கேயின் பயண்படுத்திய வழக்கில்  ஷைன் டாம் சாக்கோ காவல்துறையால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.